Cycle Rally by Forest Dept.

செ.வெ.எண்:-09/2021
நாள்:-02.10.2021
வன உயிரின வாரவிழா 2021 மாபெரும் சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று (03.10.2021) வன உயிரின வாரவிழா 2021 மாபெரும் சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, தெரிவித்ததாவது:-
வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வருடந்தோறும் வன உயிரின வார விழா அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை தமிழகமெங்கும் வனத்துறை மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாபெரும் சைக்கிள் ரேணியானது இன்று (03.10.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டு, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவு பெற்றது.
இப்பேரணியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.S.பிரபு,இ.வ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வனத்துறை பணியாளர்கள், காவல்துறை பணியாளர்கள், மற்றும் G.T.N கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.