Close

Forest Fire- Meeting

Publish Date : 10/03/2025
.

செ.வெ.எண்:-01/2025

நாள்:-01.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

மலைப் பகுதிகளில் எதிர் வரும் கோடைக்காலங்களில் காட்டுத்தீ ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், ஆத்தூர், திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, நத்தம் மற்றும் வேடசந்தூர் ஆகிய வட்டங்களில் அமைந்துள்ள மலைப் பகுதிகளில் எதிர் வரும் கோடைக்காலங்களான மார்ச், ஏப்ரல் மற்றும் மே 2025 ஆகிய மாதங்களில் காட்டுத்தீ ஏற்படுவதைத் தடுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்றிட வேண்டும். மலைப்பகுதியிலுள்ள பட்டா காடுகளில் விவசாய கழிவுகளை கோடைகாலம் முடியும் வரை தீயிட்டு அழிப்பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் அருகிலுள்ள தீயணைப்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்திட வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காட்டுப்பகுதிகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். மேலும் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். காட்டுத்தீ ஏற்படும்பட்சத்தில் தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் – 101 மற்றும் 112 வாயிலாக உடனடியாக தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் ,தீ விபத்துகள் ஏற்படும்போது தொடர்புகொள்ள வேண்டிய அருகிலுள்ள தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி மற்றும் அலுவலர்களின் கைப்பேசி எண்கள் வாயிலாகவும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். அதன்படி, திண்டுக்கல் 0451-2426701, 9445086329, நத்தம் 04544-244449, 9445086331, ஆத்தூர் 0451-2552101, 9445086515, நிலக்கோட்டை 04543-233719, 9445086332, வத்தலக்குண்டு 04543-262210, 9445086335, பழனி 04545-242299, 9445086334, ஒட்டன்சத்திரம் 04553-240399, 9445086333, வேடசந்தூர் 04551-260310, 9445086336, குஜிலியம்பாறை 04551-234101, 9360879581, கொடைக்கானல் 04542-240785, 9445086330 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர்கள், மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட இதரத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.