Forest Rights Act Success Story

Publish Date : 07/06/2019
FA

திண்டுக்கல் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்

வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு வன உரிமை சான்று வழங்கி, வன நிலங்களில் வாழும் உரிமையினை ஏற்படுத்தி தந்த தமிழக அரசிற்கு பழங்குடியின மக்கள் நெஞ்சார்ந்த நன்றி!

மாண்புமிகு அம்மா அவர்கள் ஏழை எளியோர், ஆதரவற்றோர், முதியோர், விதைவைகள், நலிவுற்ற பிரிவினர் ஆகிய சமுதாயத்தில் அடிதளத்து மக்களுக்கும் கைகொடுத்து, அவர்களை உயர்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தியுள்ளார்கள்.

மாண்புமிகு அம்மா வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாகவும் பல்வேறு மக்கள் நலதிட்டகளை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கிடைக்கசெய்யும் வகையில், ஒரு சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளார்கள்.

அதன்படி, பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழி வன வாழ்வினர் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வனவாழ் அட்டவணை பழங்குடியினர் மற்றும் இதர மரபுவழி எந்தவித ஆதார உரிமைகள் இன்றி பல சந்ததிகளாக வனபகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் வாழ்ந்துவரும் வன நிலங்கள் மீதும் இயற்கை ஆதாரங்கள் மீதும் அவர்களுக்கு உரிமைகளை அங்கீகரிக்க இந்திய அரசு சட்டம் மற்றும் பிற மரபு வழியாக வனத்தில் குடியிருப்போர் (வன உரிமைகளை அங்கிகரித்தல்) சட்டம் (சட்ட எண்:2/2007) (2008, மே 31 அன்று இருந்தவாறு) 2006 சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதில், எந்த ஒரு உரிமையும் பதிவு செய்யப்படாமல் வனங்களில் வாழ்ந்து வரும் அட்டவணை பழங்குடியினர்கள் மற்றும் பல தலைமுறைகளாக வனங்களில் வாழ்ந்து வரும் இதர மரபு வழி வன வாழ்வினர்களுக்கு வன உரிமைகள் மற்றும் வன நிலங்களில் வாழும் உரிமையினை அங்கீகரிக்கவும் மற்றும் வழங்கிடவும் தேவைப்படும் சான்றுகளையும் பதிவு செய்யவதற்குரிய வழிமுறைகளை வழங்குவதே வன உரிமைச் சட்டத்தின் நோக்கமாகும்.

வன உரிமைச் சட்டத்தின்கீழ்;, பயன்பெற அட்டவணை பழங்குடியினர் மற்றும் மலைவாழ் இனத்தினர் 13.12.2005-க்கு முன்னதாக வன நிலத்தில் குடியேறியவர்களாகவும், இதர மரபு வழி வனவாழ்வினர் 13.12.2005-க்கு முன்னர் மூன்று தலைமுறைகளாக (75 ஆண்டுகள்) வனநிலத்தில் குடியோறியவர்கள் தகுதியுடையவர் ஆவார்கள்.

மேலும், மேற்கண்ட தகுதியுடையவர்கள் தனியாகவோ, பொதுவாகவோ வனநிலங்களில் வாழ்ந்து வருவதற்கும், வாழ்வாதாரத்திற்கு தனியாகவே, பொதுவாகவே பயிர் செய்வதற்கும், சிறு வன பொருட்களை சேகரித்து பயன்படுத்துவதற்கும், சமுதாயத்திற்குள்ள பிற உரிமைகள், பருவ காலத்திற்கு ஏற்ப கால்நடை மேய்ச்சல் மற்றும் உள்ளாட்சி அல்லது மாநில அரசால் வழங்கப்பட்ட பட்டா அல்லது குத்தகை அல்லது சொத்துரிமை மாற்றம் செய்வது மற்றும் பதிவு செய்யப்பட்ட, அறிவிக்கை செய்யப்பட்ட மற்றும் அறிவிக்கை செய்யப்படாத வன கிராமங்கள், பழைய வாழ்விடங்கள், வனப்பகுதிகளில் அமைந்துள்ள நில அளவை செய்யப்படாத கிராமங்கள், இதர கிராமங்கள் ஆகியவற்றை வருவாய் கிராமங்களாக மாற்றுவதற்கும் மற்றும் மாநில சட்டங்கள் அல்லது மாவட்ட தன்னாட்சி குழுக்கள் அல்லது மண்டல தன்னாட்சிக்குழுக்களின் சட்டங்களின்கீழ் அங்கிகரிக்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் வன உயிரிகளை வேட்டையாடுதல், பிடித்தல் அல்;லது அதன் உடல் பகுதிகளை எடுக்கும் உரிமையை தவிர இதர மரபுவழி உரிமைகளை பெறுதல் மற்றும் வனநிலங்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றும்போது அவர்தம் வாழும் இடத்திலேயே மறுவாழிடம் பெறவும் மாற்று வழி பெறவும் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

வன உரிமைகளை நிர்ணயிக்கும் அதிகாரம், கிராம சபையிலும், வன உரிமைகளை விசாரித்து உரிய பரிந்துரைகளை உட்கோட்ட அளவிலான குழுவிற்கு அனுப்பியும், அவ்வாறான பரிந்துரைகளை பரிசீலித்து வன உரிமைகளை முடிவாக அங்கீகரிக்கும் அதிகாரமும் மாவட்ட அளவிலான குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தமிழகத்தில் முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் 30 வன உரிமைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, தனிநபர் உரிமை மற்றும் சமுதாய உரிமை தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, நடப்பாண்டில் தற்சமயம் வரை 63 பழங்குடியினர் மக்களுக்கு வன உரிமைச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக நடவடிக்கை மேற்கௌளப்பட்டு வருகின்றது.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கோட்டம், பொன்னூருவி, சிறுமலை வனப்பகுதியில் வன உரிமை சான்று பெற்று பயன்பெற்று வரும் திரு.காட்டுராஜா அவர்கள் தெரிவித்ததவது:-

நான் திண்டுக்கல் கோட்டம், பொன்னூருவி, சிறுமலை வனப்பகுதியில் வசித்து வருகிறேன். நாங்கள் பண்டை காலம் முதல் மரபு வழியில் எந்தவித ஆதார உரிமைகள் இன்றி பலசந்ததிகளாக இப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு வனநிலங்கள் மீதும் மற்றும் இயற்கையான ஆதாரங்கள் மீதும் எந்தவொரு உரிமையும் கிடைக்கபெறவில்லை. நாங்கள் வனப்பகுதிகளில் உள்ள நிலங்களில் சிறு பயிர்கள் செய்தும், ஆடு, மாடுகள் மேய்த்தும், வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு பின்னர் எங்களது சந்ததினரும் சட்ட ரீதியாக இப்பகுதியில் வாழ்வதற்கு தற்சமயம் தமிழக அரசு வழிவகை ஏற்படுத்த எங்களுக்கு, உரிமைச்சான்று வழங்கியுள்ளது. நாங்கள் வாழும் பகுதியிலேயே எங்களது வனத்தில் உரிமையை பெறுவதற்கு வழிவகை ஏற்படுத்திய தமிழக அரசிற்கு நாங்கள் வாழ்நாள் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்று திரு.காட்டுராஜா அவர்கள் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், கோரங்கொம்பு வனப்பகுதியில் வன உரிமை சான்று பெற்று பயன்பெற்று வரும் திருமதி.லெட்சுமி அவர்கள் தெரிவித்ததவது:-

நான் கொடைக்கானல் வட்;டம், கோரங்கொம்பு வனப்பகுதியில் வசித்து வருகிறேன். எங்களது குடும்பத்தின் நிலையான வருமானத்திற்கென்று எந்தவொரு நிலையான தொழிலும் கிடையாது. நாங்கள் வாழ்ந்து வரும் பகுதியில் வனநிலங்களில் பயிர் செய்து அதன் மூலம் கிடைக்கபெறும் வருமானத்தின் மூலம் வாழந்து வருகிறோம். இதனால் அவ்வப்போது சட்டரீதியான நடவடிக்கைளையும் நாங்கள் சந்திக்க நேர்ந்தது. தற்சமயம், தமிழக அரசு எங்களின் நலனை கருத்தில் கொண்டு, எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கென்றும் நாங்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் எங்களுக்கு சட்டப்படி வனநிலங்களில் அனுபவிக்கும் உரிமையை வழங்க ஆவண செய்துள்ளது. இதன் மூலம் பழங்குடியினராகிய நாங்கள் எந்தவொரு சிரமமின்றி எங்களது பகுதிகளிலேயே சட்ட ரீதியாக வாழ்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறாக வழிவகை ஏற்படுத்தி எங்களது வாழ்வில் ஒளி விளக்கேற்றிய தமிழக அரசிற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று திருமதி.லெட்சுமி அவர்கள் தெரிவித்தார்.

பழங்குடியினர் அந்த பகுதிகளில் தங்கள் உரிமைகளை பெற்று, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு, வழிவகை செய்துள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

(இ.சாலிதளபதி)
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திண்டுக்கல் மாவட்டம்