Close

FREE LPG-GAS

Publish Date : 13/12/2021

செ.வெ.எண்:-30/2021

நாள்:11.12.2021

விலையில்லாமல் எரிவாயு அடுப்பு, ரெகுலேட்டர் இணைப்பு குழாய்கள் மற்றும் எரிவாயு உருளைகள் பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பாரத பிரதமரின் உஜ்வாலா 2.0 யோஜனா திட்டத்தின் கீழ் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியல் 2011ன் படி இடம் பெற்றுள்ள நபர்கள், தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினர், பாரத பிரதமரின் அவாஸ் யோஜனா திட்ட பயனாளிகள், அந்தியோதைய அன்ன யோஜனா(AAY) குடும்ப அட்டைதாரர்கள், மலைவாழ் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தேயிலை தோட்ட தொழிலாளிகள் மற்றும் பழங்குடியினர் மற்றும் ஆற்றுபடுகையோரம் வசிப்பவர்கள் மற்றும் வறிய நிலையில் உள்ள அனைத்து பொதுமக்கள் அனைவருக்கும்;, விலையில்லாமல் எரிவாயு அடுப்பு, ரெகுலேட்டர் இணைப்பு குழாய்கள் மற்றும் எரிவாயு உருளைகள் அனைத்து கேஸ் ஏஜென்ஸிகளும்; வழங்கி வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அடையாள அட்டை, குடியிருப்பு சான்று, ஆதார் அட்டை நகல், குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரங்கள், வங்கி கணக்கு விபரம், சுய உறுதி மொழி படிவம், இடம்பெயர்ந்தோர் சான்று மற்றும் குறிப்பிட்ட படிவத்தில் (KYC) கையொப்பமிடப்பட்ட மனு ஆகியனவற்றை நேரில் கேஸ் ஏஜென்ஸிகளிடம் கொடுக்கப்பட வேண்டும். இத்திட்டம், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு முகவர்களால் வழங்கப்படவுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரிவாயு இணைப்பு இல்லாத மேற்கண்டவாறு தகுதியுள்ள பொதுமக்கள், தங்களது குடியிருப்புக்கு அருகிலுள்ள கேஸ் ஏஜென்ஸிகளிடம் அணுகி மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.