FREEDOM RUN – AROCKYA RALLY

நாள்:-02.10.2021
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காந்திகிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் “ஆரோக்கியமான இந்தியா” நிகழ்ச்சியின் நிறைவு விழா ஓட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காந்திகிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் “ஆரோக்கிய இந்தியா”(Fit India) நிகழ்ச்சியின் நிறைவு விழா ஓட்டத்தை, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (02-10-2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆரோக்கியமான இந்தியா(Fit India) விழா ஓட்டம் திண்டுக்கல் மாவட்ட மாநகராட்சி அலுவலகத்திலிருந்து துவக்கி வைக்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்துணை வேந்தர் (பொறுப்பு) முனைவர் T.T.ரெங்கநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் V.P.R.சிவகுமார் ஆரோக்கிய இந்தியா நிகழ்ச்சியின் அறிக்கையை வாசித்தார். இந்நிகழ்ச்சி பல்கலைகழக வாளகத்தில் 17.09.2021 அன்று துவக்கபட்டு பல்வேறு ஆரோக்கிய மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளும் நடைபெற்றதையும், அதன் ஒரு பகுதியாக 1068 கி.மீ. ஓட்டம் நடைபெற்றதையும், அதன் இறுதியாக இன்று 4.7 கி.மீ. தொலைவை 75 மாணவர்கள் ஓடி நிறைவு செய்வதையும் குறிப்பிட்டார்.
துவக்கவிழா உரையை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி ஆரோக்கியம் மற்றும் தூய்மையின் சிறப்பை வலியுறுத்தினார். மாநகரக் காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.சீனிவாசன் அவர்கள் ஆரோக்கிய இந்தியாவின் உறுதிமொழியினை அனைவரும் ஏற்கவைத்தார். மாநகரட்சி அலுவலக வளாகத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு ஓட்டம் வெள்ளை விநாயகர் கோவில், மார்கெட் பகுதி, பழனி ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இறுதியாக ஓட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. நிறைவாகக் காவல் கண்காணிப்பாளர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து மாணவர்கள் எப்பொழுதும் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு விழிப்புணர்வுடனும்,சமூக பொறுப்போடு குற்றங்களைக் காவல் துறையிடம் தெரிவப்பதைக் கடைமையாகவும் கருத வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
தூய்மை இந்தியா திட்டமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது. குப்பை என்பது யார் உருவாக்குகிறார்களோ அவர்களின் பொறுப்பாகும். மேலும், குப்பைகளை மக்கும் குப்பை, மாக்காத குப்பைகளை தரம்பிரித்து உரமாக மாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குப்பைகளை கையாலுவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்ட்டு வருகிறது. அண்ணல் காந்தியடிகளை நினைவு கூறும் விதமாக நாம் ஒவ்வொருவரும் தங்களது கடமைகளை சரியாக செய்தால், பலன் கண்டிப்பாக கிடைக்கும். அதேபோன்று உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் நமது உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக்கழத்தின் சார்பில் “ஆரோக்கிய இந்தியா” (Fit India) என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.பழனிக்குமார், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆர்.ஆனந்தி, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், மாநகராட்சி நகர்நல அலுவலர் திருமதி. இந்திரா, காந்திகிராம பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் V.P.R.சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.