Close

GDP

Publish Date : 15/07/2019
gdp1

13

செ.வெ.எண்:-44/2019 நாள்:15.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (15.07.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், திங்கள் கிழமை தோறும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை பெற்றுக்கொண்டும், இதற்கு முன் பெறப்பட்ட மனுக்களின் மீதும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அந்தந்த வட்டார அளவில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை, எந்தவித காலதாமதமுமின்றி, உடனுக்குடன் மனுக்களை பரிசீலனை செய்து, தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இன்றைய தினம், சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவமனை விரிவாக்க சட்டம் 1977-ன்படி மருத்துவமனைகள் முறைபடுத்துதல் மற்றும் ஒழுங்கு படுத்துதலுக்கான அரசு மற்றும் 10 தனியார் மருத்துவமனை, மருத்துவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி வாரம் 08.07.2019 முதல் 12.07.2019 வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் நடைபெற்றது. தொழிற்நெறி விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மூன்று மாணவியர்களுக்கும், மாணவியர்களால் உருவாக்கப்பட்ட திறன்படைப்புகளில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) சார்ந்த மூன்று மாணவியர்களுக்கும், மாணவர்களால் உருவாக்கப்பட்ட திறன்படைப்புகளில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்ந்த மூன்று மாணவர்கள் ஆகியோர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட 423 மனுக்களையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட 23 மனுக்களையும் தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.மதுபாலன்.இ.ஆ.ப, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத்திட்டம்) திரு.ச.சிவக்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரபாகரன், இணை இயக்கநர் (சுகாதாரபணிகள்) திருமதி.மாலதிபிரகாஷ் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.