GDP at District Collector Office

செ.வெ.எண்:-04/2019 நாள்:03.06.2019
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (03.06.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், திங்கள் கிழமை தோறும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை பெற்றுக்கொண்டும், இதற்கு முன் பெறப்பட்ட மனுக்களின் மீதும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அந்தந்த வட்டார அளவில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை, எந்தவித காலதாமதமுமின்றி, உடனுக்குடன் மனுக்களை பரிசீலனை செய்து, தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட 423 மனுக்களையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட 16 மனுக்களையும் தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஆ.ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத்திட்டம்) திரு.ச.சிவக்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.