GDP cancelled due to (Covid-19)
Publish Date : 10/01/2022
செ.வெ.எண்:-20/2022
நாள்:08.01.2022
கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
கொரோனா (Covid-19) பெருந்தொற்று பரவி வருவதனை கருத்தில் கொண்டு அரசு அறிவுரைகளின்படி, பொதுமக்களின் நலன் கருதி கோவிட் பாதுகாப்பு நடவடிக்கையாக, திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 10.01.2022 முதல் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தம் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்