Close

GDP

Publish Date : 18/06/2019
1

2

செ.வெ.எண்:- 26/2019 நாள்:17.06.2019

திண்டுக்கல் மாவட்டம்

ரூ.3.60 இலட்சம் மதிப்பீட்டில் 12 தாய்மார்களுக்கு இழப்பீட்டுத் தொகையினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (17.06.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், திங்கள் கிழமை தோறும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை பெற்றுக்கொண்டும், இதற்கு முன் பெறப்பட்ட மனுக்களின் மீதும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அந்தந்த வட்டார அளவில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களை, எந்தவித காலதாமதமுமின்றி, உடனுக்குடன் மனுக்களை பரிசீலனை செய்து, தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 12 தாய்மார்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை தோல்வியின் காரணமாக இழப்பீட்டுத்தொகையாக தலா ரூ.30,000 வீதம் மொத்தம் ரூ.3.60 இலட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பட்டது.

மேலும், சர்வதேச அளவில் நடைபெற்ற டேக்குவாண்டோ விளையாட்டு போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கப்பதக்கம் வென்று சாதனைபுரிந்துள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்து பரிசு வழங்கினார்.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட 380 மனுக்களையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட 18 மனுக்களையும் தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத்திட்டம்) திரு.சிவக்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.