General Election to Lok Sabha 2019 – Essential documents for Voting

Publish Date : 03/04/2019

செ.வெ.எண்:- 4/2019 நாள்:-03.04.2019
திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்கு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் ஆகிய தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கீழ்க்குறிப்பிட்டுள்ள ஆவணங்களை ஆதாரமாகப் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

1. வாக்காளர் அடையாள அட்டை
2. கடவுச்சீட்டு
3. ஓட்டுநர் உரிமம்
4. பணியாளர் அடையாள அட்டை (மத்திய / மாநில அரசுகள் / மத்திய மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள்)

5. கணக்குப் புத்தகங்கள் (வங்கி / அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)

6. வருமானவரி நிரந்தர கணக்கு எண் அட்டை
7. ஸ்மார்ட் கார்டு
8. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை
9. மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது

10. ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது)
11. அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்றப் பேரவை / சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது)

12. ஆதார் அட்டை

வாக்காளர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது வாக்களிப்பதற்கு Voter Slip ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்