Close

Gopalasamudram canal work

Publish Date : 20/09/2021
.

செ.வெ.எண்:-34/2021

நாள்:-20.09.2021

மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, கோபாலசமுத்திரம் சாலையில் துய்மைப்படுத்தும் பணியிணை துவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் நகர்புற பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறும், அதனால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் நோக்கத்திலும் மழைநீர் கால்வாய்களை தூர்வார ஆணையிட்டுள்ளார்கள்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவசுப்பிரமணியன், செயற்பொறியாளர் திரு.பாலசந்திரன், மாநகர் நல அலுவலர் மரு.இந்திரா ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட கோபாலசமுத்திரம் சாலையில் கழிவுநீர் ஓடைப்பகுதிகளில், தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியினை துவக்கி வைத்து குளத்தினை பார்வையிட்டு தெரிவித்தாவது:-

வடகிழக்கு பருவமழையினால் நகர்புற பகுதிகளில், பல்வேறு இடங்களில் வெள்ளத்தினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திட, மெகா கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்தினை 20.09.2021 முதல் 25.09.2021 வரை செயல்படுத்திட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளர்கள். அதன் அடிப்படையில் தூர்வாரும் பணிகள் இன்று 20.09.2021 முதல் துவங்கி 25.09.2021 வரை மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள், தூர்வாறும் பணி நடைபெறவுள்ளது.

குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 117 கி.மீ நீளத்தில் மழைநீர் வடிகால்கள் உள்ளன. அதனை பெரிய, நடுத்தர மற்றும் சிறிய கால்வாய்கள் என தரம் பிரிக்கப்பட்டு ஏற்கனவே தூர்வாரியது போக, எஞ்சியுள்ள 27.65 கி.மீ நீளமுள்ள கால்வாய்களில் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. அதன்படி 10 பெரிய வடிகால்கள் அதன் நீளம் 2500 மீட்டர், 19 நடுத்தர வடிகால்கள் அதன் நீளம் 3150 மீட்டர், 252 தெருக்களில் உள்ள சிறிய வடிகால்கள் அதன் நீளம் 22கி.மீ மேற்குறிப்பிட்ட வடிகால்களை 6 மண்டலங்களாக பிரித்து, அவற்றை 25.09.2021-க்குள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 8 ஜேசிபி இயந்திரங்கள், 2 டிப்பர் லாரிகள், 16 டிராக்டர், 2 ஜெட்ராடர் வாகனங்கள் மற்றும் 400 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

மேலும் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுத்திட, தூர்வாரப்பட்ட கால்வாய்களில் குப்பைகள், கட்டிட இடிபாடு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதர பொருட்களை கொட்டாமல் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து இல்லங்களிலும் செயல்படாமல் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை இயங்கிட ஏதுவாக அவற்றை பழுதுபார்க்க வேண்டும். இதன்மூலம் மழைநீர், சாலைகளில் செல்லாமல் நிலத்திற்குள் சென்று நிலத்தடி நீர்மட்டம் உயர ஏதுவாகும். இதன்மூலம் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

அதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் கோபாலசமுத்திரம் குளக்கரையினை பார்வையிட்டு ஆய்வு செய்து. குளத்தில் கழிவு நீர் கலக்காதவாறு, பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்கள். குறிப்பாக குளத்தை சுற்றியுள்ள மற்றும் உட்பகுதியில் உள்ள தேவையற்ற செடிகளையும், மண் திட்டுகளையும், அகற்ற வேண்டும். எனவும் குளத்தின் வெளிப்புறத்தில் கரைப் பகுதிகளில் துளசி, தூதுவளை போண்ற மருத்துவ குணம் கொண்ட செடிகளை நட வேண்டும், எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள். குப்பைகள், கழிவுகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக இருப்பதால் பொதுமக்கள் துணையுடன் ஆரோக்கியமான தூய்மை பகுதியாக பாரமரித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.

நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாநகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.