Close

Government – ITI – NTC – Notification

Publish Date : 27/01/2024

செ.வெ.எண்:-53/2024

நாள்:-23.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சி¬யாளர்கள் அசல் தேசிய தொழிற்சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையயத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சி¬யாளர்களுக்கு 1970 முதல் 2020 வரை அசல் தேசிய தொழிற்சான்றிதழ்கள் (NTC) மற்றும் 2013 – 2017 தோல்வியுற்ற மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்நிலையத்தில் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களது அசல் கல்விச் சான்றிதழ்கள் பெறப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. சான்றிதழ்களை பெறப்படாமல் உள்ள பயிற்சியாளர்கள் இவ்வலுவலக வேலை நாட்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திண்டுக்கல் முதல்வரை நேரடியாக அணுகி தங்களுடைய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், அலுவலகத்திற்கு வரும் பொழுது அடையாள அட்டை தேர்வு நுழைவுச் சீட்டு (Hall Ticket) / ஆதார் அட்டை கொண்டு வந்து காண்பித்து தேசிய தொழிற்சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.