Close

Government Welfare Measures

Publish Date : 08/07/2019
4

3 2

செ.வெ.எண்:- 25/2019 நாள்:08.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள்க்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (08.07.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், திங்கள் கிழமை தோறும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம்; நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை பெற்றுக்கொண்டும், இதற்கு முன் பெறப்பட்ட மனுக்களின் மீதும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரணம் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.34 ஆயிரம் மதிப்பிலான காசோலை, 3 பயனாளிகளுக்கு காதொலிக்கருவிகளும் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் திண்டுக்கல் கிழக்கு வட்டம், அடிணூத்து கிராமத்தை சார்ந்த 3 பயனாளிகளுக்கும், மாங்கரையை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3572 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.17,860 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரமும், மேலும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தார்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின்கீழ் 5 நபர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.10.50 இலட்சம் காசோலை மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.

இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட 426 மனுக்களையும் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட 18 மனுக்களையும் தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத்திட்டம்) திரு.சிவக்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.