Close

GOVT.ITI (Men) – ADMISSION 2021

Publish Date : 25/08/2021

செ.வெ.எண்:-50/2021

நாள்:-24.08.2021

திண்டுக்கல் மாவட்டம்

2021-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

2021-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 100மூ சேர்க்கை மேற்கொள்ளும் பொருட்டு நேரடி சேர்க்கை 24.08.2021 முதல் 15.09.2021 வரை நடைபெறவுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து மாணவர்கள் தங்களது சேர்க்கையினை பதிவு செய்து கொள்ளலாம்.

எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.50/- விண்ணப்பக் கட்டண தொகையை Debit Card / Credit Card / Net Banking / G-Pay வாயிலாக செலுத்தலாம். 24.08.2021 முதல் 15.09.2021 வரை விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்க 0451- 2471412 மற்றும் 0451–2471411 என்ற தொலைபேசி எண்ணையும், 9499055761, 9499055762, 9789789927, 8667488482, 8248047166 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.