Close

GOVT.ITI (Women)- 2021 SPOT ADMISSION

Publish Date : 31/08/2021

செ.வெ.எண்:-63/2021

நாள்:-27.08.2021

திண்டுக்கல் மாவட்டம்

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் மகளிர்க்கான தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 24.08.2021 முதல் 15.09.2021 வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), திண்டுக்கலில் மகளிர்க்கான தொழிற் பிரிவுகளில் 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை மூலம் 24.08.2021 முதல் 15.09.2021 வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.

பயிற்சியில் சேர்ந்து பயிலும் பயிற்சியாளர்களுக்கு அரசு வழங்கும் மடிகணினி / மிதிவண்டி / சீருடை / புத்தகம் / காலணி / மாதம் உதவித் தொகை ரூ.750/- வழங்கப்படும். ஐ.டி.ஐ-ல் சேர விரும்புவோர் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்), குள்ளனம்பட்டி, நத்தம் ரோடு, திண்டுக்கல் அவர்களை நேரில் தொடர்பு கொண்டும் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேர்க்கை குறித்த விவரங்களுக்கு 9499055764, 9965338860 மற்றும் 9655727477 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.