Govt ITI (Women) -Admission
செ.வெ.எண்:-82/2025
நாள்:-27.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்¬, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
2025 ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும், மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு 19.05.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 13.06.2025 ஆகும். விண்ணப்பக் கட்டண தொகையான ரூ.50 விண்ணப்பதாரர் Debit Card/ Credit Card/ Net Banking /G.Pay வாயிலாக செலுத்தலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.
திண்டுக்கல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்பிக்கப்படும் தொழிற்பிரிவுகள், படிப்பு காலம் மற்றும் கல்வித்தகுதி விவரம் வருமாறு:-
Information Communication Technology System Maintenance (NSQF) தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, Technician Power Electronics System (NSQF) –திறன் மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர் ஆகிய இரண்டு ஆண்டுகள் படிப்பல் சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Computer Operator and Programming Assistant (NSQF)-கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோக்கராமிங் அசிஸ்டண்ட், Desktop Publishing Operator (NSQF)- டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், Fashion Design & Technology (NSQF)- நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் ஆகிய ஓராண்டு படிப்புகளில் சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Surface Ornamentation Techniques (Embroidery) NSQF- அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம், Sewing Technology (NSQF)- தையல் தொழில்நுட்பம் ஆகிய ஓராண்டு படிப்பில் சேர 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவிகளுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும். பயிற்சியில் சேர மகளிருக்கு உச்சக்கட்ட வயது வரம்பு இல்லை. விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, மிதிவண்டி, வரைபடக்கருவிகள் மற்றும் காலணிகள், இலவச பயண அட்டை, மத்திய அரசின் NCVT சான்றிதழ், கட்டணமில்லா உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி, காப்புத் தொகை ரூ.100 பயிற்சி முடிந்தவுடன் திரும்ப வழங்கப்படும். விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டு தோறும் வழங்கப்படும்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் ஆகியவற்றில் உதவி மையங்கள்(Help Desk) அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் தொழிற்பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.