Grama Sabha Meeting
செ.வெ.எண்:-79/2022
நாள்:30.10.2022
திண்டுக்கல் மாவட்டம்
01.11.2022 அன்று ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
01.11.2022 ஊராட்சிகள் தினம் அன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
இக்கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டியிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம் (Peoples Plan Campaign), வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி / சொத்து வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக்குழு உருவாக்குதல், சுழற்சி முறையில் நிர்வாகிகளை மாற்றம் செய்தல், 2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களின் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின அறிக்கை, மக்கள் நிலை ஆய்வு, மக்கள் நிலை ஆய்வு பட்டியலில் விடுபட்ட / புதிய இலக்கு மக்கள் குடும்பங்களை சேர்த்தல் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.
எனவே, ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.