Close

GRAMA SABHA

Publish Date : 30/09/2021

செ.வெ.எண்:-57/2021

நாள்:29.09.2021

காந்தி ஜெயந்தி தினம் அன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப, அவர்கள் தகவல்

02.10.2021 காந்தி ஜெயந்தி தினம் அன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் (உள்ளாட்சி தேர்தல் 2021 நடைபெற்று வருவதால் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள பழனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகள், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் 23 ஊராட்சிகள் தவிர) பிற ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் முற்பகல் 10.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் (VPDP), பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், உணவு பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம், ஐல் சக்தி இயக்கம், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்(ஊரகம்) முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன்கூடிய பசுமை வீடு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டிய பொருகள், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பொது விநியோகத்திட்டம், சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டம், குழந்தைகள் நலன் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

எனவே, ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கிராம சபையில் தவறாது கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.