Close

Great Tamil Dream Program

Publish Date : 07/03/2023

செ.வெ.எண்:-44/2023

நாள்:-21.02.2023

திண்டுக்கல் மாவட்டம்

தமிழர் பண்பாட்டின் பெருமையை உணர்த்தும் விதமாக, “தொட்டுத் தொடரும் நம்ம நவீன இலக்கிய மரபு” மற்றும் “தமிழர் வாழ்வு புனைவுகள் வழியே” என்னும் தலைப்பின் கீழ் மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாக மாபெரும் தமிழ்க்கனவு – தமிழர் மரபு மற்றும் பண்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்துதல் தொடர்பாக, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழர் பண்பாட்டின் பெருமையை உணர்த்தும் விதமாக, “தொட்டுத் தொடரும் நம்ம நவீன இலக்கிய மரபு” என்னும் தலைப்பின் கீழ் திரு.ச.தமிழ்ச்செல்வன் அவர்களும் மற்றும் “தமிழர் வாழ்வு புனைவுகள் வழியே” என்னும் தலைப்பின் கீழ் திரு.பவா செல்லதுரை அவர்களும் நிகழ்த்திட உள்ள மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி திண்டுக்கல் நகர், மதுரை ரோட்டில் உள்ள பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 23.02.2023 (வியாழக்கிழமை) அன்று முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.

அந்நிகழ்ச்சியின் போது புத்தகக்காட்சி, “நான் முதல்வன்” திட்டங்களைக் காட்சிப்படுத்துதல், கல்விக்கடன் முகாம், தொழில் முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் வங்கிக் கடன் வாய்ப்புகள் குறித்து விளக்குதல் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுப் பொருட்கள் விற்பனை போன்ற நிகழ்வுகளும் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன். இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.