Close

Grocery Shop Information

Publish Date : 30/03/2020

செ.வெ.எண்:-38ஃ2020 நாள்:29.03.2020
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில்; அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

————————————————————————————————————————————-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்கள். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காய்கறி அங்காடி மற்றும் பிற காய்கறி விற்பனை கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் வசித்து வரும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தாங்கள் வசித்து வரும் வீட்டிற்கு அருகாமையில் சிரமமின்றி வாங்குவதற்கு ஏதுவாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மளிகை உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படும் பொதுமக்களுக்கு அவரவர் வசித்து வரும் பகுதிகளில் அத்தியாவசிப் பொருட்களை விநியோகம் செய்ய உள்ள நிறுவனங்களுக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு தங்களது இல்லங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்த விபரங்களை அனுப்பி வைத்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களின் வீடுகளில் நேரிடையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிப் பொருட்களை விநியோகம் செய்ய உள்ள நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வாட்ஸ் அப் எண்கள் விபரம் வருமாறு:-

வ.எண் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிறுவனத்தின் பெயர் வாட்ஸ் அப் எண் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் வழங்கப்படக் கூடிய பகுதிகள்
1. கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் 8489943093 வார்டு எண் 1 முதல் 5, 36 முதல் 40 வரை, செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் என்.எஸ் நகர்
2. எஸ்விஎஸ் மளிகை 9443707510 வார்டு எண் 21 முதல் 24, 33 முதல் 35 வரை மற்றும் பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள்
3. எஸ்விஎஸ் சூப்பர் மார்க்கெட் 9443707520 வார்டு எண் 19,20,25 முதல் 27 வரை, குரும்ப பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள்
4. ஜிஎஸ் மளிகை 9842163322 வார்டு எண் 41 முதல் 48, தோட்டனூத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள்
5. ஈஸ்வரி ஸ்டோர்ஸ் 9994484850 வார்டு எண் 6 முதல் 10 வரை, என்ஜிஒ காலனிக்குட்பட்ட பகுதிகள்
6. சங்கமம் சூப்பர் மார்க்கெட் 9444400607 வார்டு எண் 11 முதல் 14 வரை, சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள்
7. சாகர் சூப்பர்; மார்க்கெட் 9443031366 வார்டு எண் 15 முதல் 18 வரை, 30 முதல் 32 வரை, அடியனூத்து ஊராட்சிக்குட்பட்டபகுதிகள்
8. ஆப்பிள் சூப்பர் மார்க்கெட் 9698040893 என்.எஸ்.நகர், சீலப்பாடி, ஜி.டி.என் நகர் நந்தவனப்பட்டி, சாலையூர்
9. கீர்த்தி சூப்பர் மார்க்கெட் 8608288075 எம்.வி.எம் நகர், கூட்டுறவு நகர், என்.எஸ்.நகர், நந்தவனப்பட்டி,
10. பி.எஸ்.கே. ஷாப்பிங் மார்க்கெட் 8056507414 போலீஸ் காலனி, சீலப்பாடி, என்.ஜி.ஓ.காலனி, கே.ஆர்.நகர், சுப்பிரமணியபுரம், எம்.எம்.கோவிலூர் பிரிவு
11. ஜு.பி மளிகை 9629600979 திண்டுக்கல்
12. பி.எஸ்.பி.மளிகை 9842539400 திண்டுக்கல்
13. கோல்டன் மளிகை 9894893937 பேகம்பூர், திண்டுக்கல்
14. திருப்பதி ஸ்டோர் 7010584168 வடமதுரை
15. எ.ஆர்.மளிகை 9443474216 அய்யலூர்
16. கணபதி காய் கனி அங்காடி 9715332995 வேடசந்தூர் சுற்றியுள்ள கிராமங்கள்
17. நியூ நெல்லை ஸ்டோர் 9443572003 வேடசந்தூர் டவுன்
18. சோமு மளிகை 9150478267 வேடசந்தூர் டவுன்
19. தங்கம் மளிகை 9789106836 கோவிலூர் சுற்றியுள்ள கிராமங்கள்
20. அம்மு மால் 8012551112 பழனி
21. ஜெயந்தி ஸ்டோர் 9500770615 சின்னாளபட்டி
22. சகாதேவன் மளிகை 9842791992 வத்தலக்குண்டு
23. ரெங்கா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் 9884955086 நிலக்கோட்டை
24. வசந்தம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் 9150664444 நிலக்கோட்டை
25. ஸ்நேகம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் 8675566226 வத்தலக்குண்டு
26. கமர்தீன் மளிகை 9942009969 வத்தலக்குண்டு
27. சஞ்ஜீவ் சூப்பர் வினியோகம் (பதஞ்சலி தயாரிப்பு) 9751454521 கோவிலூர்
28. எபிநேசர் சூப்பர் மார்க்கெட் 7373740385 9486833385 ஒட்டன்சத்திரம்
29. என்.சி.எஸ். மளிகை (கொழும்பு ஸ்டோர்) 9842480224 9047580224 ஒட்டன்சத்திரம்
30. கீர்த்தி சூப்பர் மார்கெட் 9003633065 ஒட்டன்சத்திரம்

மேலும் அத்தியாவசியப் பொருட்கள் எடுத்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், அதனை எடுத்து வரும் பணியாளர்கள் உரிய முகக் கவசம் உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து அத்தியாவசியப் பொருட்களை வினியோகம் செய்திட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-