Gundass
செ.வெ.எண்:-70/2024
நாள்:-26.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகரம், முத்தழகுப்பட்டி எண்-21-பி மேற்குத் தெரு என்ற முகவரியைச் சேர்ந்த ஞானமுத்து என்பவரது மகன் அபிஷேக் என்ற வெஸ்வின் அபிஷேக், ஆண், வயது 24/2024 என்பவர் கடந்த 28.09.2024 அன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் ஒரு நபரை முன் விரோதம் காரணமாக கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தினரால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிரி அபிஷேக் என்ற வெஸ்லின் அபிஷேக் என்பவர் மேற்சொன்ன வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேற்சொன்ன அபிஷேக் என்ற வெஸ்லின் அபிஷேக் என்பவரை தடுப்புக்காவலில் வைக்கக் கேட்டு, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.பிரதீப்,இ.கா.ப., அவர்களால் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்று அபிஷேக் என்ற வெஸ்லின் அபிஷேக் என்பவரை தடுப்புகாவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி,இ.ஆ.ப., அவர்களால் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து அபிஷேக் என்ற வெஸ்லின் அபிஷேக் என்பவர் மதுரை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.