Close

Horticulture Department

Publish Date : 15/11/2021

செ.வெ.எண்:-27/2021

நாள்:13.11.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் புதுபிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (RPMFBY) தாங்கள் சாகுபடி செய்த தோட்டக்கலை பயிர்களை காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளான வறட்சி, வெள்ளம், மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிர் காப்பீடு பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் புதுபிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (RPMFBY) தாங்கள் சாகுபடி செய்த தோட்டக்கலை பயிர்களை காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளான வறட்சி, வெள்ளம், மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிர் காப்பீடு பெறலாம்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2021-22 ராபி பருவத்தில் தோட்டக்கலைப் பயிர்களான வெங்காயம், கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் வாழை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

புதுபிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் (RPMFBY) பயன்பெற தேர்வு செய்யப்பட்ட பயிர்களுக்குரிய பிரிமியம் தொகையை கடன் பெறும் விவசாயிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் செலுத்தலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் உரிய படிவத்தில் விவரங்களை பதிவு செய்து ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாழை, வெங்காயம், கத்தரி, மிளகாய் மற்றும் வெண்டை ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம். இதில் பிரீமியம் தொகையாக (ஏக்கருக்கு) வாழை ரூ.2,865.20, வெங்காயம் ரூ.1,732.70, கத்தரி ரூ.834.86, மிளகாய் ரூ.1,190.54 மற்றும் வெண்டை ரூ.638.50 செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்