Close

Horticulture Dept

Publish Date : 28/04/2022

செ.வெ.எண்: 77/2022

நாள்:27.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

தோட்டக்கலை துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் உள்ள காய்கறி மகத்துவ மையம் ரெட்டியார்சத்திரம் மற்றும் அரசு தோட்டக்கலைப் பண்ணை சந்தையூரில் சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலமில்லா விவசாய தொழிலாளர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில் காய்கறி மகத்துவ மையம் ரெட்டியார்சத்திரத்தில் 80 நபர்களும், அரசு தோட்டக்கலைப் பண்ணை சந்தையூரில் 40 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் பூங்கொத்து மற்றும் பூ அலங்காரம் செய்தல், தேனீ வளர்ப்பு மற்றும் நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றை அடங்கிய 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் தோட்டக்கலைத் துறையின் இணையதளத்தில் (www.tnhorticulture.tn.gov.in) இடம் பெற்றுள்ள விண்ணப்பத்ததை பதிவிறக்கம் செய்து, சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் / பயிற்சி அளிக்கப்படவிருக்கும் பண்ணைகளில் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு 30 நாட்களுக்கு போக்குவரத்து செலவுக்கான நாள் ஒன்றுக்கு ரூ.100 அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த வாய்ப்பை நிலமில்லா விவசாயிகள் படித்த, படிக்காத இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர், திரு.ஜோ.பெருமாள்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்