Close

Farmers who grow vegetables naturally can apply for government incentives.

Publish Date : 30/09/2020

செ.வெ.எண்:-34/2020,

நாள்:28.09.2020

திண்டுக்கல் மாவட்டம்

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.

தோட்டக்கலை துறையின் மூலமாக இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் பருவம் தவறிய காலத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக எக்டருக்கு ரூ.4000/- வழங்கப்படுகிறது. மேலும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.2500/- மற்றும் காய்கறி பயிர்களான வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடி வகைகளுக்கு எக்டருக்கு ரூ.3750/- ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதுதவிர அங்கக சான்று பெற ஒரு விவசாயிக்கு ரூ.500/- மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 2 எக்டர் வரை ஒரு விவசாயிக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தனியாகவும் அல்லது விவசாய குழுக்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.இத்திட்டத்தில் ஊக்கத் தொகை பெற சம்மந்தப்பட்ட இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.இதன் மூலம் சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரம் பெறுவதுடன் நல்ல முறையில் இலாபாம் ஈட்ட முடியும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்த பரப்பு விபரங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் ஆகிய சிட்டா, அடங்கல் மற்றும் வயல்புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்ததந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உழவன் செயலி மற்றும் www.tn.hortinet.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.