Horticulture Insurance
செ.வெ.எண்:-35/2021
நாள்:15.11.2021
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்த தோட்டக்கலை பயிர்களை, புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளான வறட்சி, வெள்ளம், மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் காப்பீடு பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்(RPMFBY) தாங்கள் சாகுபடி செய்த தோட்டக்கலை பயிர்களை காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளான வறட்சி, வெள்ளம், மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் காப்பீடு பெறலாம்.
திண்டுக்கல் மாட்டத்திற்கு 2021-22 ராபி பருவத்தில் தோட்டக்கலைப் பயிர்களான வெங்காயம், கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் வாழை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற தேர்வு செய்யப்பட்ட பயிர்களுக்குரிய பிரீமியம் தொகையை கடன் பெறும் விவசாயிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவ வங்கிகளில் செலுத்தலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் உரிய படிவத்தில் விவரங்களை பதிவு செய்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாழை, வெங்காயம், கத்தரி, மிளகாய் மற்றும் வெண்டை ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம். இதில் பிரீமியம் தொகையாக (ஏக்கருக்கு) வாழை ரூ.2,865.20, வெங்காயம் ரூ.1,732.70, கத்தரி ரூ.834.86, மிளகாய் ரூ.1,190.54 மற்றும் வெண்டை ரூ.638.50 செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.