Close

Horticulture-Kodaikanal

Publish Date : 21/06/2025

செ.வெ.எண்:-76/2025

நாள்:20.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் நுண்ணீர்ப்பாசனம் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தோட்டக்கலைத்துறை மூலம் நுண்ணீர்ப்பாசனம் திட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டு நுண்ணீர்ப்பாசனம் திட்டம் (ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா-“துளி நீரில் அதிக பயிர்”) இனத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரத்திற்கு 250 ஹெக்டர் பொருள் இலக்கும், ரூ.63.00 இலட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரையும், இதர விவசாயிகள் அதிகபட்சமாக 5 ஹெக்டர் வரையும் நுண்ணீர்ப்பாசனம் அமைத்து பயன்பெறலாம்.

நுண்ணீர்ப்பாசனம் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பட்டா, பயிர் அடங்கல், சிறு, குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் MIMIS என்ற இணையத்தின் (https://tnhorticulture.tn.gov.in:8080/Subsidy/ApplySubsidy) மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் அல்லது கொடைக்கானல் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.