Close

HSC REGISTRATION

Publish Date : 03/06/2019

செ.வெ.எண்:-05/2019 நாள்:-03.06.2019

திண்டுக்கல் மாவட்டம்

+2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தகவல்

+2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, +2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வரவேண்டும். 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ள வேண்டும்.

03.06.2019 முதல் 17.06.2019 வரை வேலைவாய்ப்பு பதிவு பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப் பணி நடைபெறும் பதினைந்து நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும், www.tnvelaivaaipppu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணைய தளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. +2 வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.