Close

Human Milk Bank

Publish Date : 08/08/2019
1

2

திண்டுக்கல் மாவட்டம்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்

“தாய்ப்பால் வங்கி” திட்டத்தின் மூலம் பச்சிளம் குழந்தைகளை நலம்பெற செய்து வரும் தமிழக அரசிற்கு தாய்மார்கள் நெஞ்சார்ந்த நன்றி

“எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லா நிலை வேண்டும்” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கருத்திற்கிணங்க, மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு கொண்டியிருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலன் கருதி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, இந்தியாவிலேயே தமிழகத்தை முன்னோடி மாநிலமாக திகழும் வண்ணம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அங்குள்ள பெண்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும். எனவேதான் தமிழக அரசு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கென பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பெண்களின் முழு திறமையையும், ஆற்றலையும் வெளிக்கொணரும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தொட்டில் குழந்தை திட்டம், பெண்குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், பெண்களின் சுகாதாரத்தினை பேணும் வகையில் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், மகளிர் சுகாதார வளாகங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களை தடுத்திட 13 அம்சங்கள் திட்டம், 24மணி நேர மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், தாலிக்கு 8 கிராம் தங்கத்துடன் உதவித்தொகை வழங்கும் பெண்களுக்கான திருமண நிதியுதவித்திட்டம், தாய், சேய் நலன் காக்கும் வகையில் நிதி உயர்வு அளித்து திருத்தி அமைக்கப்பட்ட

டாக்டர்.முத்துலெட்சுமி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பெண்கள் எழுத்தறிவு திட்டம், தொடர் கல்வி திட்டம் அவர்கள் வசிக்கும் அருகிலேயே பள்ளிகள், கல்லூரிகள் என மகளிர் நலன் காக்கும் வகையில்; பல்வேறு சிறப்பான திட்டங்கள் பெண்களுக்காகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி பெண்களின் பொருளாதார நிலையை தாங்களே உயர்த்திக்கொள்ளும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மகளிர் தொழில் முனைவோர்களுக்கென பிரத்யோக தொழில்பேட்டைகள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு, விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், பணிபுரியும் மகளிர்களுக்கென மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் என மகளிர் முன்னேற்றத்திற்கென எண்ணற்ற திட்டங்களும் வெற்றிகரமாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் என்பது ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. போதிய அளவு தாய்ப்பால் இல்லாத மகளிர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்கப்பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒரு முன்னோடி திட்டமாக சிறார் நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி என்னும் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய் போல் சிறந்த இயற்கை உணவு வேறு இல்லை. பச்சிளம் குழந்தைகளின் உடலின் சீரான வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தாய் பால் தான் அடிப்படையாக அமைகிறது. பிரசவத்தின் போது தாய்மார்களுக்கென உடல் ரீதியாக ஏற்படும் சில இடையூறுகளின் காரணமாக உடனடியாக குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற சமயங்களில்; பச்சிளம் குழந்தைகளுக்கு தாய் பால் வங்கியின் மூலம் தாய்பால் கிடைப்பதற்கு அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தாய் பால் வங்கி திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைகளும் பயன்பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தாய் பால் வங்கி செயல்படுகிறது. அதில் குறிப்பாக மருத்துக்கல்லூரி இல்லாத திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த 2016-ல் தாய் பால் வங்கி துவங்கப்பட்டது. மேற்கண்ட திட்டத்தின்கீழ் தாய் மார்களின் ஒப்புதல் பெற்ற பிறகே அவர்களிடம் 50 முதல் 200 மி.லி வரை தாய்பால் சேகரிக்கப்படும். முதலில் தாய்பால் சூடாக்கப்படுகிறது. பின்னர் தகுந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பேக்டீரியாக்கள் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட வெப்ப நிலையில் குளிர்சாதன பெட்டியின் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு பாதுகாக்கப்படும் தாய்பாலினை 6 மாதங்கள் வரை கெடாமல் பாதுக்காக்க முடியும். மருத்துவமனையில் பிறந்த, தாய்பால் தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்பால் வங்கியின் மூலம் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ள தாய்பால் வழங்கப்படுகிறது. அதன்படி, 2016-ம் ஆண்டில் 935 பச்சிளம் குழந்தைகளும், 2017-ம் ஆண்டில் 266 பச்சிளம் குழந்தைகளும்

2018-ம் ஆண்டில் 307 பச்சிளம் குழந்தைகளும் மற்றும் 2019-ம் ஆண்டில் தற்சமயம் வரை 99 பச்சிளம் குழந்தைகளும் என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 1607 பச்சிளம் குழந்தைகள் நலம் பெற்றுள்ளனர். தாய்ப்பால் வங்கி திட்டத்தின் மூலம் பச்சிளம் குழந்தைகளை நலம்பெற செய்து வரும் தமிழக அரசிற்கு தாய்மார்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய்பால் இத்திட்டம் குறித்து திருமதி.பாண்டிசெல்வி அவர்கள் தெரிவித்ததாவது.

நான் சாணார்பட்டியில் வசித்து வருகிறேன். எனது வயது 25, எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. தற்சமயம் எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எனது பிரசவத்தின் போது உடல் ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்பட்டது. அதன் காரணமாக உடனடியாக எனது குழந்தைக்கு தாய்பால் கொடுக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. எனது குழந்தைக்கு உடனடியாக தாய்பால் கொடுக்க முடியவில்லை என்று மிகுந்த மனவருத்தத்துடன் இருந்தேன் அச்சமயம், மருத்துவர்கள் என்னிடம் பச்சிளம் குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தாய்பால் வங்கி குறித்து என்னிடம் எடுத்துரைத்து, தாய்பால் வங்கியின் மூலம் எனது குழந்தைக்கு தாய்பால் வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தமிழக அரசு, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் பொதுமக்களை பயன்பெற செய்து வருகின்றனர். பச்சிளம் குழந்தைகளின் நலனையும் கருத்தில் கொண்டு, தாய்பால் வங்கி என்ற திட்டத்தினையும் தொடங்கி அதன்மூலம் பச்சிளம் குழந்தைகளையும் பயன்பெற செய்து வருகிறது. இத்திட்டத்தை ஏற்படுத்தி கொடுத்த தாயுள்ளம் கொண்;ட மாண்புமிகு அம்மா அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் எவ்வித பாகுபாடின்றி முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கோடு, எண்ணற்ற பல அரிய திட்டங்களை செயல்படுத்தியும், புதிதாகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்தும், பொதுமக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

இ.சாலி தளபதி
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திண்டுக்கல் மாவட்டம்.