Close

ICPS Data Analysist Posting

Publish Date : 18/07/2019

செ.வெ.எண்:54/2019 நாள்:18.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கைச்செய்தி

தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், (Integrated Child Protection Scheme) கீழ் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் பகுப்பாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்:

தகவல் பகுப்பாளர் – 1 பதவி (தொகுப்பூதியம் ரூ.14,000/- ஒரு மாதத்திற்கு)

கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் வயது:

• பி.ஏ. / பி.சி.ஏ. / பி.எஸ்சி புள்ளியியல் / பி.எஸ்சி கணிதம் (10ூ2ூ3).

• ஏதாவது ஒரு நிறுவனத்தில் தகவல் பகுப்பாளராக 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

• 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. (பொது விண்ணப்பதாரர்களுக்கு)

• ஆ பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர் நிலையில் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். வயது – 62 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. (ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு)

• மேற்கண்ட பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Passport size) 15 நாட்களுக்குள்; கீழ்கண்ட முகவரில் வந்து சேரும் வகையில் அனுப்பப்படவேண்டும்.

விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ், பிளாட் எண்:4, 2வது குறுக்கு தெரு, (மாடி), ளுPசு நகர், கலெக்ட்ரேட் (அஞ்சல்), திண்டுக்கல் – 624 004. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல்: dcpudgl19@gmail.com மற்றும் தொலைபேசி எண்: 0451 – 2460725 ஆகியவற்றில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்;.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.