Close

Independence Day

Publish Date : 17/08/2021
.

செ.வெ.எண்:- 31/2021

நாள்:- 15.08.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி,கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 75-வது சுதந்திர தினவிழா சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.08.2021) காலை 09.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன்,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா ஆகியோர் முன்னிலையில் பறக்கவிட்டார்கள்.

காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் 33 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மருத்துவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள், பேரூராட்சித்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்த முன்களப்பணியாளர்கள் என மொத்தம் 179 அலுவலர்களை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து, சுதந்திரப்போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், ஆத்தூர் வட்டம், சின்னாளபட்டியில் வசிக்கும் சுதந்திரப்போராட்ட தியாகி திரு.எஸ்.பூலூர் செட்டியார்(வயது 93) அவர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று, சந்தித்து பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.

பின்னர், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் 15.08.2021 முதல் 20.09.2021 வரை நடத்தப்படும் “புத்தகங்கள் வழங்கும் பேரியக்கம்” நிகழ்ச்சியில் “மக்களைத் நோக்கி புத்தகங்கள்” துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் படிவங்களை வழங்கி, விழாவை தொடங்கி வைத்து, தெரிவித்ததாவது:-

மக்களைத் நோக்கி புத்தகங்கள் என்ற திட்டம் தொடங்கப்பட்டிருப்பது பயனுள்ள முயற்சி. அதுவும் கொரோனா காலத்தில் தொடங்கியிருப்பது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புத்தகங்கள் விலையில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்குவது, புத்தகங்கள் வாங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம், கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களையும், மலைக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களையும் சென்றடையும் வகையில் அதிகளவில் புத்தகங்கள் விற்பனை மேற்கொள்ள வேண்டும். விழாக்களில் புத்தகங்கள் கொடுக்கும் பழக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

முன்னதாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மாகாந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, அங்கு தேசியக்கொடியேற்றினார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி பி.விஜயகுமாரி, இ.கா.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்/கூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) திருமதி பிரியங்கா,இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.மு.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி காசிசெல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சி.மாறன், துணை ஆட்சியர்(பயிற்சி) திரு.இரா.இரா.விசுவநாதன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் மரு.கே.கே.விஜயகுமார், இணை இயக்குநர்(சுகாதார நலப்பணிகள்) மரு.கோ.பூங்கோதை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.வீ.பழனிகுமார் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.