Close

INSTITUTE OF TOOL ENGINEERING

Publish Date : 03/06/2019

செ.வெ.எண்:-01/2019 நாள்:-03.06.2019

திண்டுக்கல் மாவட்டம்

அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டில் முதலாமாண்டு டூல் அண்ட் டை டிப்ளமோ பட்டய படிப்பில் மாணவர்கள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தகவல்

தமிழக அரசின் தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திண்டுக்கல்லில் இயங்கி வரும் கருவிப் பொறியியல் பயிலகத்தில் வேலை வாய்ப்பு சார்ந்த. அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகத்தால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட மூன்றாண்டு இயந்திரவியல் (டூல் அண்ட் டை) பட்டய படிப்பு 1982 ஆண்டு முதல் தமிழக அரசு விதிமுறைகளின்படி கல்வி கட்டண சலுகை. கல்வி உதவித் தொகை. பேருந்து கட்டண சலுகை ஆகிய சலுகைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.

அரசு கருவிப் பொறியியல் பயிலகத்தில் 2019-2020ஆம் கல்வி ஆண்டில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கருவிப் பொறியியல் பயிலகத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகின்ற 10.06.2019-க்குள் இப்பயிலகத்தில் வழங்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த டிப்ளமோ படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், இது குறித்து விவரங்களுக்கு, முதல்வர். கருவிப் பொறியியல் பயிலகம். திண்டுக்கல்-624003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 0451-2471301 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.