IRCS Ambulance Driver Job
செ.வெ.எண்:-20/2020 நாள்:- 21.08.2020
திண்டுக்கல் மாவட்டம்
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் செயல்படுத்தப்படும் இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய்சேய் சேவை திட்டத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 26.08.2020-ஆம் தேதி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை சார்பில் இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய்சேய் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய்சேய் சேவை ஊர்தி ஓட்டுநர்களுக்கான நேர்முகத்தேர்வு 26.08.2020-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. தகுதியுள்ள நபர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்டச் செயலாளரை 9976135222 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.