Close

ITI ADMISSION – DINDIGUL

Publish Date : 09/12/2020

செ.வெ.எண்:-10/2020

நாள்:07.12.2020

திண்டுக்கல் மாவட்டம்

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

2020-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் நேரடி சேர்க்கையானது 12.12.2020 வரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை (Spot Admission) மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் (மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate), மதிப்பெண் சான்றிதழ் (Mark Sheet) மற்றும் சாதிச் சான்றிதழ் (Community Certificate) திண்டுக்கல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வருகை தருமாறு தெரிவிப்பதுடன், பயிற்சியாளர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50ஃ- (ரூபாய் ஐம்பது மட்டும்) விண்ணப்பதாரர்களின் Debit Card / Credit Card / Net Banking / G-Pay வாயிலாக செலுத்தலாம்.

கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்த பயிற்சியாளர்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்டும், இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையிலும், முதலில் வரும் பயிற்சியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், இத்தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படின், முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், நத்தம் மெயின் ரோடு, குள்ளனம்பட்டி, திண்டுக்கல் அவர்களை அணுகி தெரிந்துகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0451 – 2471412 மற்றும் 0451 – 2471411 ஆகிய தொலைபேசி எண்களிலோ, 8870282856, 9789162163, 9789789927, 8667488482, 8248047166, 9791421415 என்ற அலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்;திண்டுக்கல்.