Close

ITI admission

Publish Date : 17/06/2025

செ.வெ.எண்:-54/2025

நாள்:-16.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு 19.06.2025 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் நேரடி சேர்க்கை மூலம் நடைபெறும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 19.06.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு மாணவ, மாணவிகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

குள்ளனம்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்பிக்கப்படும் தொழிற்பிரிவுகள், படிப்பு காலம் மற்றும் கல்வித்தகுதி விவரம் வருமாறு:- FITTER(பொருத்துநர்), FITTER-Dual(பொருத்துநர்), TURNER(கடைசலர்), MACHINIST(இயந்திரவியல்), M.M.V.(கம்மியர் மோட்டார் வண்டி), ELECTRICIAN (மின்சார பணியாளர்), SPIN.TECH(ஸ்பின்னிங் டெக்னீசியன்), RACT (குளிர்பதனம் மற்றும் தட்ப வெட்ப நிலை கட்டுப்படுத்தும் பிரிவு தொழில்நுட்பவியலாளர்), Advance CNC Machining Technician, Basic Designer and Virtual Verifier (Mechanical), Basic Designer and virtual verifier(Mechanical) ஆகிய இரண்டு ஆண்டுகள் படிப்பில் சேர எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். WIREMAN (கம்பியாள்) இரண்டு ஆண்டுகள் படிப்பில் சேர 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். WELDER(பற்றவைப்பவர்), L.G.M.(தோல்பொருள் உற்பத்தியாளர்) மற்றும் M.F.W.(காலனி உற்பத்தியாளர்) ஆகிய ஓராண்டு படிப்புகளுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MECH.DIESEL (கம்மியர் டீசல்), Industrial Robotics & Digital Manufacturing Technician மற்றும் Manufacturing Process Control & Automation ஆகிய ஓராண்டு படிப்பிற்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டண தொகையான ரூ.50 விண்ணப்பதாரர் Debit Card/ Credit Card/ Net Banking /G.Pay வாயிலாக செலுத்தலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும். பயிற்சியில் சேர ஆண்கள் வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை ஆகும். மகளிருக்கு உச்சக்கட்ட வயது வரம்பு இல்லை. விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, மிதிவண்டி, வரைபடக்கருவிகள் மற்றும் காலணிகள், இலவச பயண அட்டை, மத்திய அரசின் NCVT சான்றிதழ், கட்டணமில்லா உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி, காப்புத் தொகை ரூ.100 பயிற்சி முடிந்தவுடன் திரும்ப வழங்கப்படும். விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டு தோறும் வழங்கப்படும்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் ஆகியவற்றில் Help Desk அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படின், திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ அல்லது கைபேசி எண்கள்(9894610168, 9499055762) வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.