ITI WIREMAN HELPER
செ.வெ.எண்:28/2019 நாள்:09.07.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
திண்டுக்கல் நத்தம் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2019-ம் ஆண்டு 17.08.2019 மற்றும் 18.08.2019 ஆகிய தேதிகளில் மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது. அத்தேர்விற்கான விண்ணப்பங்களை 28.06.2019 முதல் 26.07.2019 முடிய முதல்வர்இ அரசு தொழிற் பயிற்சி நிலையம்இ குள்ளனம்பட்டிஇ நத்தம் ரோடுஇ திண்டுக்கல்லில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தினை நேரடியாக ரூ. 10/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 26.07.2019-க்குள் முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம்இ திண்டுக்கல்லில் நேரடியாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்இ திண்டுக்கல்.