Close

Jal Sakthi Abiyan(Central Teem)

Publish Date : 15/07/2019
jsa1

செ.வெ.எண்:-41/2019 நாள்:- 13.07.2019

jsa2

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், முள்ளிப்பாடி கிராமத்தில் பொதுமக்களால் குளம் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மத்திய அரசு அணுசக்தி துறை, இணைச் செயலாளர் டாக்டர்.எஸ்.மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்கள் பார்வையிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், முள்ளிப்பாடி ஊராட்சியில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளம் தூர்வாறுதல் பணியினை இன்று (13.07.2019) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி அவர்கள் முன்னிலையில் மத்திய அரசு அணுசக்தி துறை, இணைச் செயலாளர் டாக்டர்.எஸ்.மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் நீர் சேமிப்பு முக்கியத்துவம் குறித்து (JAL SAKTHI ABIYAN) ஓரு இயக்கமாக அறிவித்து (JAL SAKTHI ABIYAN) பொதுமக்கள் பங்களிப்புடன் மழைநீர் சேகரிப்பினை மேற்கொள்ளவும் அதன்படி, 01.07.2019 முதல் நீர்மேலாண்மை இயக்கம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், ஏற்கனவே அமைக்கப்பட்டிருப்பின், அவைகளை பழுது சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் பாரம்பரிய நீர்நிலைகளை பராமரிப்பு செய்தல் மற்றும் பயன்படுத்திய நீரை, மறு சுழற்சி செய்தும், பூமிக்கடியில் சேமித்தும் சுத்திகரித்தும் மறுபயன்பாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு திணடுக்கல் மாவட்டத்திற்கு 7 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் நீர்மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் வசிக்கும் பகுதிகளில் நீர் சேமிப்பு குறித்த கட்டமைப்பை உருவாக்கி, பராமரிக்க வேண்டு;ம். மேலும் நீரின் முக்கியத்துவத்தை கருதி தங்கள் கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை பராமரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை போடாமல் நீர்நிலைகளை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மழைநீர் சேகரிப்பு, நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு மாவட்டம் முழுவதும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய தினம் (13.07.2019) முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள அணைப்பட்டி, ஏஜிஎம்பி குளத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளம் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி அவர்கள் முன்னிலையில் மத்திய அரசு அணுசக்தி துறை, இணைச் செயலாளர் டாக்டர்.எஸ்.மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும் இப்பணி துவங்கி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு நீர் மேலாண்மை குறித்தும், நீர் தேவையின் முக்கியத்துவம் குறித்தும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.மு.கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கருப்பையா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்