Close

Jallikattu – nallamanayakanpatti

Publish Date : 07/03/2022
.

..

செ.வெ.எண்:-09/2022

நாள்:05.03.2022

நல்லமநாயக்கன் பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மற்றும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், நல்லமநாயக்கன்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலய பெருவிழாவை முன்னிட்டு 06.03.2022 அன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(05.03.2022) சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், நல்லமநாயக்கன் பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்துதல் தொடர்பாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். எந்தவிதத்திலும் காளைகளுக்கு துன்புறுத்தல் இருத்தல் கூடாது. ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் பார்வையார்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திருமதி சந்தனமேரி கீதா, கால்நடை பராமரிப்புத்துறை உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.