Jamabanthi-3rd day Collector

செ.வெ.எண்:-09/2022
நாள்:03.06.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் வட்டாட்சியர்(மேற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 1431-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 01.06.2022 அன்று தொடங்கி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 3ம் நாளாக இன்று(03.06.2022) நடைபெற்ற வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) பணிகளை வருவாய் தீர்வாய அலுவலர்ஃமாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இன்றைய தினம், தருமத்துப்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட ஆடலூர், பன்றிமலை, சத்திரப்பட்டி, பழைய கன்னிவாடி, கசவனம்பட்டி, சிந்தலக்கு;டு, தாமரைக்குளம் ஆகிய 7 வருவாய் கிராமங்களுக்கான பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், வருவாய் தீர்வாய நிகழ்ச்சி அறிவிப்பின்போது, கிராம மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கையின்படி, 2 மனுதாரர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
வருவாய் தீர்வாயத்தின்போது பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வுகாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தகுதியுடைய அனைத்து மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அனைத்து மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணவும், தீர்வு காணப்படாத மனுக்கள் விபரம் மற்றும் அவை என்ன காரணத்தினால் நிறைவேற்ற இயலவில்லை என்ற தெளிவான காரணமும் அளிக்க வேண்டும். மேலும், அவர்கள் அதுகுறித்து தொடர்ந்து மனு செய்வதைத் தவிர்க்கும் வகையில், மாற்று வழியில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள பொதுமக்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி சேவை மனப்பான்மையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய மனுக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் தீர்;வாய அலுவலர்களால் பெறப்பட்டு, முதல்வரின் முகவரி (ஊஆ ர்நடிடiநெ) என்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து ஒப்புதல் ரசீது வழங்கப்படும். பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்து மனுதாரருக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். எத்தனை மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன, எத்தனை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன, நிலுவையில் உள்ள மனுக்கள் விபரம் குறித்து அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ரமேஷ்பாபு, துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.