Close

Jamabanthi Petitions

Publish Date : 03/06/2022

செ.வெ.எண்:-02/2022

நாள்:01.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 1431-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று தொடங்கியது. அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் மொத்தம் 701 மனுக்கள் பெறப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1431-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று(01.06.2022) தொடங்கியது. மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் மொத்தம் 701 மனுக்கள் பெறப்பட்டன. அதன் விபரம் வருமாறு:-

திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய் தீர்வாய அலுவலர்ஃமாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் (மேற்கு) வட்டம் ரெட்டியார்சத்திரம் குறுவட்டத்திற்குட்பட்ட, குட்டத்துப்பட்டி, மாங்கரை, அம்மாபட்டி, கொத்தப்புள்ளி, சில்வார்பட்டி, அழகுபட்டி, கே.புதுக்கோட்டை, குருநாதநாயக்கனூர், சுள்ளெரும்பு ஆகிய 9 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து 62 மனுக்கள் பெறப்பட்டன.

திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்ஃமாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா தலைமையில் திண்டுக்கல் (கிழக்கு) வட்டம், சாணார்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட, கூவனூத்து, வடகாட்டுப்பட்டி, விராலிப்பட்டி, தவசிமடை, எமக்கலாபுரம், தி.பஞ்சம்பட்டி, சாணார்பட்டி, கோணப்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, கோம்பைபட்டி, வேம்பார்பட்டி ஆவிளிப்பட்டி ஆகிய 12 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 32 மனுக்கள் பெறப்பட்டன.

ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்ஃதனி மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) திரு. சே.ஹ.சேக்முகைதீன் தலைமையில் ஆத்தூர் வட்டம், ஆத்தூர் குறுவட்டத்திற்குட்பட்ட, போடிகாமன்வாடி, சீவல்சரகு, ஆத்தூர், பாளையங்கோட்டை, பாறைப்பட்டி, வீரக்கல், கும்மம்பட்டி, வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி ஆகிய 9 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 81 மனுக்கள் பெறப்பட்டன.

நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்ஃமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) திருமதி காசிசெல்வி தலைமையில் நத்தம் வட்டம், ரெட்டியபட்டி குறுவட்டத்திற்குட்பட்ட, முளையூர், புன்னப்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, இடையபட்டி, சாத்தாம்பாடி, லிங்கவாடி, புதூர், ரெட்டியபட்டி ஆகிய 8 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 103 மனுக்கள் பெறப்பட்டன.

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்ஃதிண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கு.பிரேம்குமார் தலைமையில் நிலக்கோட்டை வட்டம், நிலக்கோட்டை குறுவட்டத்திற்குட்பட்ட, நரியூத்து, கோட்டூர், பச்சமலையான்கோட்டை, நிலக்கோட்டை, கோடாங்கிநாயக்கன்பட்டி, நக்கலூத்து ஆகிய 6 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 151 மனுக்கள் பெறப்பட்டன.

பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்ஃபழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.சிவக்குமார் தலைமையில் பழனி வட்டம், தொப்பம்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட, மரிச்சிலம்பு, கீரனூர், தொப்பம்பட்டி, வேலம்பட்டி, புளியம்பட்டி, வில்வாதம்பட்டி, மொல்லம்பட்டி, மேட்டுப்பட்டி, வாகரை ஆகிய 9 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 43 மனுக்கள் பெறப்பட்டன.

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்ஃமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி இ.விஜயா தலைமையில் ஒட்டன்சத்திரம் வட்டம், சின்னக்காம்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட, கே.கீரனூர், சின்னக்காம்பட்டி, எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, குத்துலுப்பை, ஓடைப்பட்டி, ஜ.வாடிப்பட்டி ஆகிய 7 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 30 மனுக்கள் பெறப்பட்டன.

வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்ஃமாவட்ட ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.சு.சண்முகம் தலைமையில் வேடசந்தூர் வட்டம், எரியோடு குறுவட்டத்திற்குட்பட்ட, உசிலம்பட்டி, அம்மாபட்டி, வெல்லம்பட்டி, எரியோடு, இ.சித்தூர், ஸ்ரீராமபுரம், மல்வார்பட்டி, மாரம்பாடி, நல்லமனார்கோட்டை ஆகிய 9 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 53 மனுக்கள் பெறப்பட்டன.

குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்ஃதனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திரு.ல.இராஜசேகரன் தலைமையில் குஜிலியம்பாறை வட்டம், கோட்டாநத்தம் குறுவட்டத்திற்குட்பட்ட, திருக்கூர்ணம், ஆர்.வெள்ளோடு, ஆலம்பாடி, கோட்டாநத்தம், தோளிப்பட்டி, தி.கூடலூர், லந்தக்கோட்டை, தீண்டாக்கல், கருங்கல் ஆகிய 9 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 117 மனுக்கள் பெறப்பட்டன.

கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்ஃகொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முனைவர் ச.முருகேசன் தலைமையில் கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் குறுவட்டத்திற்குட்பட்ட, கூக்கால், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, ஆகிய 5 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 29 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு அவற்றை அடிப்படை தேவைகள், சமூக சொத்துக்கள், தனிப்பட்ட நபர்களின் கோரிக்கைகள் என மூன்றாக பிரித்து, சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை எடுக்கவும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள், நிலுவையி;ல் உள்ள மனுக்களின் விபரம் மற்றும் கோரிக்கையினை நிறைவேற்ற இயலாத மனுக்களின் விபரம் குறித்தும், கோரிக்கை நிறைவேற்ற இயலவில்லை என்ற காரணத்திற்கான விபரம் ஆகியவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப. அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.