Jamabanthi
செ.வெ.எண்:-53/2022
நாள்:29.05.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 1431-ம் பசலிக்குரிய வருவாய் தீர்வாயம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 01.06.2022 முதல் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் 1431-ம் பசலிக்குரிய வருவாய் தீர்வாயம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 01.06.2022 முதல் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டத்திற்கும் கீழ்கண்டவாறு வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வ. எண் | வட்டத்தின் பெயர் | வருவாய் தீர்வாய அலுவலர்கள் விபரம் |
1 | திண்டுக்கல் (மேற்கு) | மாவட்ட ஆட்சித்தலைவர், திண்டுக்கல். |
2 | திண்டுக்கல் (கிழக்கு) | மாவட்ட வருவாய் அலுவலர், திண்டுக்கல். |
3 | ஆத்தூர் | தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தேசிய நெடுஞ்சாலை எண்.209 திண்டுக்கல். |
4 | நத்தம் | மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்), |
5 | நிலக்கோட்டை | வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல். |
6 | பழனி | வருவாய் கோட்டாட்சியர், பழனி, |
7 | ஒட்டன்சத்திரம் | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், திண்டுக்கல். |
8 | வேடசந்தூர் | மாவட்ட ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், திண்டுக்கல். |
9 | குஜிலியம்பாறை | தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திண்டுக்கல். |
10 | கொடைக்கானல் | வருவாய் கோட்டாட்சியர், கொடைக்கானல். |
அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய மனுக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் தீர்;வாய அலுவலர்களால் பெறப்பட்டு, முதல்வரின் முகவரி (ஊஆ ர்நடிடiநெ) என்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து ஒப்புதல் ரசீது வழங்கப்படும். பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்து மனுதாரருக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.