Close

Jamabhandhi Kodaikanal-1434 Fasali

Publish Date : 26/05/2025
.

செ.வெ.எண்:-70/2025

நாள்:-23.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 1434-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் தொடங்கியது.

கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1434-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் 22.05.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது. கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பண்ணைக்காடு குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் இன்று (23.05.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1434-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 22.05.2025 அன்று முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தின்போது பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களைப் பெற்று, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு, உரிய பயன்களை பயனாளிகளுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொடைக்கானல் வட்டத்தில் இன்றைய தினம்(23.05.2025) பண்ணைக்காடு குறுவட்டத்திற்குட்பட்ட வெள்ளக்கவி, அடுக்கம், பூலத்துார், பண்ணைக்காடு, வடகவுஞ்சி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதுதொடர்பான பதிவேடுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, பொதுமக்களிடம் இருந்து 67 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன, கிராம மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கையின்படி, ஒரு மனுதாரருக்கு பட்டா பெயர் திருத்தம், 2 பயனாளிகளுக்கு விபத்து நிவாரணத் தொகை, ஒரு மனுதாரருக்கு பழங்குடியினர் அடையாள அட்டை, 3 மனுதாரருக்கு புதிய குடும்ப அட்டை ஆகியவை வழங்கப்பட்டது

தொடர்ந்து, 27.05.2025 அன்று தாண்டிக்குடி குறுவட்டத்திற்குட்பட்ட தாண்டிக்குடி, காமனுார், கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலுார் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய முகாமில், புதிய குடும்ப அட்டைகள், பழங்குடியினர் அடையாள அட்டை, பட்டா பெயர் திருத்தம் உள்ளிட்ட சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். முகாமை முன்னிட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம், மனுக்கள் பதிவு அரங்கம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

முகாமில், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ம.திருநாவுக்கரசு, கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.சு.பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.