Close

Kabir Puraskhkar award

Publish Date : 02/12/2021

செ.வெ.எண்:-06/2021

நாள்:02.12.2021

சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்கள் ‘கபீர் புரஸ்கார் விருது” பெற விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு “கபீர் புரஸ்கார் விருது” ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 3 பிரதிகளுடன், “மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்- 624004” என்ற முகவரியில் 08-12-2021-ஆம் தேதி மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என திண்டக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.