Karthigai deepam Instruction
Publish Date : 19/11/2021
செ.வெ.எண்:-49/2021
நாள்:18.11.2021
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதனால், திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு 19.11.2021(வெள்ளிக்கிழமை) அன்று திண்டுக்கல் மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலம் வர அனுமதி இல்லை.
எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அன்றைய தினம் கிரிவலம் வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.