Karthigai Deepam instruction
செ.வெ.எண்:-38/2021
நாள்:16.11.2021
திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. கோவிட் தொற்று நடவடிக்கையாக சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பதால் 17.11.2021-ஆம் தேதி பிற்பகல் 01.00 மணி முதல் 20.11.2021-ஆம் தேதி வரை வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சார்ந்தவர்கள் திருவண்ணாமலை நகருக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி தினங்களில் பொதுமக்கள் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலை நகருக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.