KendraVidyalaya
செ.வெ.எண்:-61/2022
நள்:30.03.2022
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தேர்வுகளை எதிர்கொள்வது தொடர்பாக, புதுடில்லியில் 01.04.2022 அன்று காலை 11 மணிக்கு மேற்கொள்ளும் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.
மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் தேர்வுகளை எதிர்கொள்வது தொடர்பாக புதுடில்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் 01.04.2022 அன்று காலை 11 மணிக்கு கலந்துரையாடுகிறார்.
இந்த நேரடி நிகழ்ச்சியில் மாணவர்களால் கேட்கப்படும் தேர்வு தொடர்புடைய கேள்விகளுக்கு பிரதமர் அவர்கள் பதில் அளிப்பதுடன், மகிழ்ச்சியாக தேர்வு எழுதுவதற்கான ஆலோசனைகளை வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சி தூர்தர்ஷன், டிடி நேஷனல், டிடி நியூஸ், டிடி இந்தியா, வானொலிகள், தொலைக்காட்சிகள், யுடியூப் சேனல்கள் உட்பட டிஜிட்டல் மீடியா, தூர்தர்ஷன் நேஷனல், ராஜ்யசபா டிவி, ஸ்வயம் பிரபா ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த நிகழ்;ச்சியை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டு பயன் பெறலாம்.
இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் பார்த்து பயன்பெறும் வகையில் பள்ளி வளாகத்தில் அகன்ற திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என காந்திகிராமம் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் திரு.ஆ.குருசாமி பாண்டியன் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.