Kendriya Vidyalaya SPORTS

Publish Date : 09/05/2019
1

செ.வெ.எண்:-7/2019 நாள்:- 08.05.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கைசெய்தி

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 50வது கேந்திரிய வித்யாலயா மண்டல அளவிலான கபடி போட்டிஇ காந்திகிராமம் கிராமிய பல்கலைக் கழகத்து உள்விளையாட்டு அரங்கில் 29-4-2019இ 30-4-2019 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. பிற கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இருந்து சுமார் 260க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் போட்டியில்இ கேந்திரிய வித்யாலயா காந்திகிராமம் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றுஇ ஓரிஸா மாநிலம்இ புவனேஷ்வரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.

17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் போட்டியிடும் போட்டியிலும் இப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர். அவர்களில் சிலரும் வேறு பள்ளியில் சிறப்பாக விளையாடிய மாணவர்களில் சிலரும் ஒரு குழுவாக தேர்வு செய்யப்பட்டுஇ அவர்களும் புவனேஷ்வரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்று தேசிய அளவில் விளையாட தகுதி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்