Kendriya Vidyalaya

Publish Date : 09/05/2019

செ.வெ.எண்:-8/2019 நாள்:- 08.05.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கைசெய்தி

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி கடந்த 4 வருடங்களாக 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் 100% விழுக்காடும் 7 வருடங்களாக 10ஆம் வகுப்பு பொதுதேர்வில் 100% தேர்ச்சி விகிதம் பெற்று உள்ளது. இவ்வருடம் (2018-19) 12ஆம் வகுப்பு மாணவர் யு.கிருத்திக் விஷ்ணு 500க்கு 465(93%) மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். அதேபோல 10ஆம் வகுப்பு மாணவி ஜெனிபர்கிறிஸ்டி 500க்கு 460(92%) மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அயராது உழைத்த ஆசிரியப் பெருமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டினார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்