Close

Kodai Festival – 2023 – 60th Flower Show on 26.05.2023

Publish Date : 24/05/2023

செ.வெ.எண்:-40/2023

நாள்:-24.05.2023

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2023 மற்றும் 60-வது மலர்க்கண்காட்சி ஆகியவை 26.05.2023-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றவுள்ளார். மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலக்கண்காட்சியினையும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கலைநிகழ்ச்சிகளையும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கண்காட்சி அரங்கினையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2023 மற்றும் 60-வது மலர்க்கண்காட்சி ஆகியவை 26.05.2022-ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா-2023 தொடக்கவிழா 26.05.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. கோடை விழாவை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றவுள்ளார். தொடர்ந்து மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலக்கண்காட்சியினையும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கலைநிகழ்ச்சிகளையும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கண்காட்சி அரங்கினையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளனர். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளனர்.

அரசு முதன்மை செயலாளர் /சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மரு.க.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் /வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர்/தமிழ்நடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திரு.சந்தீப்நந்துாரி, இ.ஆ.ப., அவர்கள், இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை/ மேலாண்மை இயக்குநர்(டான்ஹோடா) மரு.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் சிறப்புறையாற்றவுள்ளனர்.

விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் வரும் 26.05.2023 முதல் 28.05.2023 வரை 3 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 26.05.2023 முதல் 02.06.2023 வரை 8 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக மங்கள இசை, பரதம், தப்பாட்டம், ஒயிலாட்டம், தெம்மாங்கு இசை, பட்டிமன்றம், ஆடல்-பாடல், பலகுரல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. 28.05.2023(ஞாயிற்றுக்கிழமை) அன்று பட்டிமன்றம் நிகழ்ச்சியும், 30.05.2023(செவ்வாய்க்கிழமை) அன்று படகு போட்டி நிகழ்ச்சியும், 31.05.2023(புதன்கிழமை) அன்று கால்நடைத்துறை மூலம் நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், கலைப்பண்பாட்டுத்துறை மூலம் தினமும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது.

விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து கோடைவிழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.