Close

Kodai Vizha

Publish Date : 30/05/2019
1

2 3 4 5 6 7 8

செ.வெ.எண்:-26/2019 நாள்:- 30.05.2019
திண்டுக்கல் மாவட்டம்

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி இன்று 30.05.2019 தொடங்கி 08.06.2019 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

கொடைக்கானல் கோடைவிழா மற்றும் 58-வது மலர்க்கண்காட்சியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் ஆகியோர்; விழாவினை தொடங்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று (30.05.2019) கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் திண்டுக்கல் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள், மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் ஆகியோர் விழாவினை தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார். இயக்குநர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை திரு.என்.சுப்பையன்.இ.ஆ.ப அவர்கள், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திருமதி.எஸ்.தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோடை விழாவினை தொடங்கி வைத்து மாண்மிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் பேசியதாவது:-

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்கள், தமிழக மக்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காகவே அர்பணித்து மக்கள் பணியாற்றினார்கள். மாண்புமிகு அம்மா அவர்களால் கடந்த காலங்களில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தை சார்ந்தவர்களும் பயனடைந்துள்ளனர்.

அவ்வழியில்;, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் தேவைகளை அறிந்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடையும் வண்ணம், ஒரு சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளார்கள். மக்கள் நலத்திட்ட பணிகளை செயல்படுத்துவதில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
‘மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலா மலை வாசஸ்தலமாக விளங்குவதால், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் கோடைகாலத்தில் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருகை தந்து சுற்றுலா இடங்களை கண்டு மகிழ்கின்றனர்.

அதன்படி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளும் 2016-ம் ஆண்டில் 65 இலட்சம் சுற்றுலா பயணிகளும், 2017-ம் ஆண்டில் 68 இலட்சம் சுற்றுலா பயணிகளும் மற்றும் 2018-ம் ஆண்டில் 75 இலட்சம் சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலுக்கு வருகை புரிந்துள்ளனர். கோடை காலத்தை முன்னிட்டு, நமது மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதிக்கு வருகை புரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கோடைகாலத்தில்; வருகை தரும் ஏராளமான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் “மே” மாதத்தில், உழைக்கும் மக்களின் சோர்வை போக்கும் வகையில், கொடைக்கானலில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கோடை விழாவானது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மிகுந்த கோடை விழாவானது, இன்று முதல் தொடங்கப்பட்டு 10 நாட்கள் வரை சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த கோடை விழாவை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரியவகை பூக்கள் மற்றும் பருவ மலர் செடிகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன. மலர் கண்காட்சி 3 நாட்கள் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் நடைபெற உள்ளது.

சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி மற்றும் சுகாதாரத்தை பேணும் வகையிலும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கோடை காலங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் கொடைக்கானலில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் பலஅடுக்கு வாகன நிறுத்தம் ஏற்படுத்துவதற்கு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி பெற்றவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும் இதன் மூலம் கொடைக்கானலில் போக்கு வரத்து நெரிசலை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொடைக்கானலை மேலும், பசுமையாக்கின்ற் வகையில் வனத்துறையின் மூலமாக, சில்வர் ஓக்; மற்றும் மருத்துவ குணம் கொண்ட 1 இலட்சம் மரங்கள் இலவசமாக வழங்கப்பட்டு நடப்பட்டு வருகிறது. மேலும், வன விலங்குகள், மனிதர்களின் மோதலை தடுக்கின்ற வகையில் வனத்துறை மூலமாக பொருப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன உயிரினங்களின் தண்ணீர் தேவைக்காகவும், நீர் பிடிப்பி மேலாண்மைக்காகவும் தடுப்பு அணைகள் கட்டப்பட்டு, வன உயரினங்களின் தண்ணீர் தேவை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர மருத்துவ செடிகள் பாதுகாப்பு திட்டம், யானை புகா அகழிகள் மேம்பாட்டு திட்டம், வன உயிரின தீவண உற்பத்தி திட்டம், சிறப்பு பகுதி மேலாண்மை திட்டம், வனபாதுகாப்பு திட்டம், வன உயரினங்களுக்கு தளவாட பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வனத்துறையின் சார்பில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொடைக்கானல் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.46.36 கோடி மதிப்பீட்டில் குடகனாறு குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் கொடைக்கானலில் உள்ள குடிநீர் பிரச்சனை முழுவதுமாக தீர்க்கப்படும். கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் நகராட்சி சார்பில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 7 பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதில் 6 பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மேலும், உரக்கிடங்குகளில் இயந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று, தற்சமயம் முடியும் தருவாயில் உள்ளது. இதே போன்று, தூய்மை பாரத இயக்கம் – திடக்கழிவு மேலாண்மை பணிகள் 2018 – 2019-ன் கீழ் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் 4 இடங்களில் நூண்ணுயிர் உரக்கிடங்கு மையங்களும், நகரின் தூய்மையை காக்க 8 சிறு வாகனங்களும், Bio Mining முறையில் குப்பைகளை அகற்றம் செய்தல் பணிகளும், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கொடைக்கானல்

நகராட்சி பகுதிகள் தூய்மையான நகராக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூலதன நிதி மானியம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் இடைவெளி நிரப்பும் நிதி 2017-2018-ன் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நகராட்சி துப்புரவு பணியாளருக்கான 24 குடியிருப்புகள் கட்டும் பணிக்கு கடந்த 20.05.2018 அன்று நடைபெற்ற கோடை விழாவின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். மூலதன நிதி 2018-19 தடுப்பணை அமைத்தல் திட்டத்தின்கீழ் நகராட்சியின் பராமரிப்பில் உள்ள கீழ் அணையான மண் அணை மற்றும் மனோ ரத்தினம் சோலையில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கும் இடைப்பட்ட பகுதியில் புதிதாக தடுப்பணை ஒன்றை ரூ.986.70 இலட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு கடந்த 20.11.2018 அன்று நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. அணையின் கொள்ளவை உயர்த்தி தற்போது சேகரிக்கப்படும் நீரை காட்டிலும், இருமடங்கு நீரினை சேமிக்கும் அடிப்படையில் கட்டுமானங்கள் குறித்த வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் தயாரிக்கும் பணிகளை விரைந்து முடித்து, கட்டுமான பணிகளை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கனால் நகராட்சியில் பயன்பாட்டில் இல்லாமல் உள்ள கே.ஆர்.ஆர்.கலையரங்கம் பகுதியில் பயணிகள் தங்கும் விடுதியாக (யாத்திரி நிவாஸ்) ரூ.650 இலட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளது.கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 24 வார்டுகளிலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்;கும் நோக்கத்தில் தனியார் பங்களிப்போடு செயல்படுத்தும் திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்படவுள்ளன. தனியார் பங்களிப்புடன் ஏரிச்சாலையில் நகராட்சி அலுவலகம் அருகில் புனரமைக்கப்பட்டுள்ள 25 கழிவறைகளை கொண்ட ஆண், பெண் இருபாலருக்கான நவீன கழிவறை அமைக்கப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

கொடைக்கானல் நகராட்சி பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி இயக்குநருக்கு ரூ.56 கோடி மதிப்பீட்டில் பிரேரணை அனுப்பபட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நகராட்சி வருவாய் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் படகு இல்லத்தை சீரமைக்கும் பணிகள் மற்றும் பயன்பாட்டில் உள்ள படகுகளுக்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, கூடுதலாக படகு குழாம் ஒன்றினை அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 2018-19 நிதியாண்டில் மட்டும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், மாண்புமிகு முதலமைச்சர் சூரிய சக்தியுடன்கூடிய பசுமை வீடுகள் திட்டம் ஒன்றிய பொது நிதியின்கீழ் மகளிர் சுகாதார வளாகம் பராமரிப்பு பணிகள், ஊராட்சிகளின் பொது நிதியின்கீழ் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் கொட்டகை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் அங்கன்வாடி அமைத்தல் மற்றும் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டங்கள், நபார்டு கிராம சாலை திட்டங்கள் மற்றும் பிரதம மந்திரி கிராம சலை மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தி;ட்டங்களின்கீழ் மொத்தம் 159 பணிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. இதில் சாலை பணிகள் மட்டும் 29.500 கி.மீ தூரத்திற்கு ரூ.13.55 கேர்டி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது.

இது தவிர, ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கொடைக்கானல் மலைப் பகுதியில் பல்வேறு சாலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மலைப்பகுதியில் உள்ள சாலைகள் சீரமைப்பு மற்றும் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர, கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா இடங்களுக்கு வருகை புரியும் சுற்றுலாப்பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சுற்றுலாத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

கொடைக்கானலுக்கு பருவ காலங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவதால,; வாகன போக்குவரத்து நெருசலை தவிர்க்க போதுமான வாகன நிறுத்துமிடம்; இல்லதாதால், கொடைக்கானலில் பல்லெடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மாநில போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், கொடைக்கானல் பகுதியில் தற்சமயம் தங்கும் விடுதிகள், கட்டிடங்கள் வரன்முறைபடுத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று இப்பிரச்சனை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்புமின்றி முறையாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், இந்த கோடைவிழாவில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழகத்தின் பாரம்பரிய பெருமையை உலகிற்கு மென்மேலும் பறை சாற்றுகின்ற வகையில் பாரம்பரிய நடனங்கள்;, கிராமிய கலைநிகழ்ச்சிகள்;, தமிழர்களின் வீரவிளையாட்டுப் போட்டிகள்;, பட்டிமன்ற நிகழ்ச்சிகள், செல்லப் பிராணிகளின் கண்காட்சி, படகுபோட்டி, படகு அலங்கார அணிவகுப்பு, விளையாட்டுப்போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.பொது மக்களின் தேவைகளை அறிந்து, தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொது மக்கள் அறிந்து கொண்டு, அத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று, தங்களது வாழ்க்கை தரத்தினை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சீ.சீனிவாசன் அவர்கள் பேசினார்.

மலர் கண்காட்சியினை தொடங்கி வைத்து மாண்மிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் கடந்த ஏழு ஆண்டு கால ஆட்சியில் தோட்டக்கலைத்துறையில் பல்வேறு முன்னோடி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு தமிழகம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

குறிப்பாக விவசாயிகளுக்கு தேவையான சொட்டுநீர் பாசன கருவிகளை கடந்து ஏழு ஆண்டுகளாக இந்தியாவிலேயே சிறு குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் வழங்கிட மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தை படுத்துவதற்கும் நகர்புற மக்களுக்கு நியாமான விலையில் காய்கறிகள் கிடைத்திட வழிவகை செய்யும் பெருநகர காய்கறி அபிவிருத்தி திட்டத்தினை நகர்புற மக்களும் பயன்படும் வண்ணம் மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவை தவிர ஒருங்கிணைந்த தோட்டக்கலை இயக்கத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், பரம்பரா கிரிஷி விக்காஸ் யோஜனா மற்றும் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம் போன்ற சிறந்த திட்டங்களை செயல்படுத்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் ஆணையிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்களின் அறிவுரைகளின்படி தோட்டக்கலை திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வதாரத்தை பெருக்கி விவசாயிகளின் உற்ற தோழனாக மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் ஆட்சி செயல்பட்டு வருகின்றது.

கொடைக்கானல் பகுதியில் பிரையண்ட் பூங்கா மற்றும் செட்டியார் பூங்காகளை மேம்படுத்தும் வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது . இதில் சிறுவர் பூங்கா, நீறுற்றுகள், நடை பாதை அமைத்தல், அண்ணா பூங்காவில் கேட் அமைத்தல், நீறுற்றுகள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு ரூ.138 லட்சம் நிதி வழங்கி பணிகள் மேற் கொண்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2013-14 ஆம் ஆண்டு கண்ணாடி மாளிகை புதுப்பிக்கும் வகையில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டு கண்ணாடி மாளிகையை புதிப்பித்து நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது . மேலும் நடப்பு நிதியாண்டில் பிரையண்ட் பூங்கா நவீனப்படுத்துதல் பணிக்காக ரூ.1 கோடியும் பிரையண்ட் பூங்கா மேம்பாட்டு பணிக்காக ரூ.6.8 கோடியும் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பூங்காங்களை மேம்படுத்தப்பட்டுள்ளதால் பூங்காவிற்கு வரக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. ஆண்டு ஒன்றிற்கு சாராசரியாக 6.00 இலட்சம் பேர் பார்வையிடுகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.7.70 கோடி வரவினமாக பெறப்பட்டுள்ளது.

மேலும் இப்பூங்காவில் சுமார் 70 வகையான ஒரு பருவ மலர் செடிகளும், நிரந்தர அழகுற மலர் செடிகளும் கோடைப்பருவத்தில் பூக்கும் நிலையில் ஒவ்வொரு வருடமும் நடவு செய்யப்பட்டு கோடைக்காலத்தில் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்திடும் வண்ணம் அழகுற பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசு தோட்டக்கலை பண்ணை, கொடைக்கானலில் மாண்புமிகு முதலவர் அம்மாவின் 110 விதியின் கீழ் ரோஜா பூங்கா அமைப்பதற்கு 2011-12 ஆம் ஆண்டில் ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு முதல் தவணையாக ரூ.3.80 கோடியில் சுற்று சுவர், நடைபாதை அமைத்தல் கழிப்பிட வசதி போன்ற முதற்கட்ட பணிகள் நடைப்பெற்று முடிவடைந்துள்ளது. அதை தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் ரோஜா தோட்ட பணிகளில் முக்கியமான ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 16300 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரோஜா தோட்ட பகுதிகளில் புல் தரைகள் மற்றும் அழகு செடிகள் நடவு செய்யபட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும், கொடைக்கானல் பகுதி விவசாயிகள் பயன்பெறும் விதமாக கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி அரசு தோட்டக்கலை பண்ணைகளின் மூலமாக நடவு பொருட்கள் நாற்றுக்களான பிளம்ஸ், பேரி, பீச்சஸ், முட்டைகோஸ், ஆரஞ்சு, அவகோடா பழச் செடிகள் மற்றும் மிளகு, ஒட்டு ஆரஞ்சு, சில்வர்ஓக், காப்பி, போன்றைவை கடந்த ஐந்தாண்டுகளில் 65.00 லட்சம் எண்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இப்பண்ணையின் மூலமாக 10 லட்சம் எண்கள் பழச் செடிகள் மற்றும் நாற்றுக்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் ஆசியுடன் கோடை விழாவின் துவக்க விழாவான மலர்கண்காட்சி சீறும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு என் வாழ்த்துக்களை இதயம் நிறைந்த மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் பேசினார்.

கலை நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்து மாண்மிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிகாலத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கென பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, அவ்வழியில் தமிழக அரசு தற்சமயம்; சுற்றுலாத்துறைக்கென பல்வேறு நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருகிறது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த மலை வாசஸ்தளமாக விளங்குகிறது. இதனை காண உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

கொடைக்கானலில் இயற்கை எளில் நிறைந்த கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் நடைபாதை, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, குணாகுகை, மோயர் பாயிண்ட், அமைதி பள்ளத்தாக்கு, மதிகெட்டான் சோலை, குறிஞ்சி ஆண்டவர் கோவில், சலேத்மாதா ஆலையம், செண்பகநூர் அருங்காட்சியம், வெள்ளி நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சுற்றலா தளங்கள் உள்ளன.

கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா,கொடைக்கானல் ஏரி, கோக்கர்ஸ் நடைபாதை, செட்டியார் பூங்கா, தேவதை நீர்வீழ்ச்சி போன்ற இடங்களுக்கு செல்லும் அணுகு சாலைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ரூ.4.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் 12 ஆண்டுகளுக்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரினை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏதுவாக, கோக்கர்ஸ் வாக் பகுதியில் ரூ.15.20 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுள்ளது. மாநில அரசின் நிதியுதவி திட்டத்தின்கீழ் தாண்டிக்குடி பாலமுருகன் கோவிலில் தங்கு விடுதி மற்றும் கழிப்பிடங்கள் கட்டுதல்,குடிநீர், மின் விளக்கு வசதி, அணுகு சாலை மேம்பாடு போன்ற பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.47.80 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இதே போன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான பழனியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக முக்கிய இடங்களில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் கழிப்பிடங்கள், ரூ.34.24 இலட்சம் மதிப்பீட்டில் முக்கிய இடங்களில் விளம்பர பலகைகள் மற்றும் வழி காட்டி பலகைகள், இதே போன்று வேடசந்தூர் ஒன்றியம் மாரம்பாடி புனித அந்தோணியர் ஆலைய பகுதியில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, ஓய்வு கூடம் போன்ற பணிகள் மேற்கௌ;வதற்கென ரூ.68 இலடசம் மதிப்பீட்டில் ஒப்பளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. திருமலைக்கேணியில் கிரிவல பாதை மேம்பாடு, நீர் வீழ்ச்சிக்கு செல்லும் அணுகு சாலை மற்றும் பக்கவாட்டு சுவர் கட்டி பாலம் அமைக்கும் பணி ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதுபோன்று சுற்றுலாத்துiயை மேம்படுத்துவதற்;கென தமிழக அரசின் சார்பில் துரிதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் பேசினார்.

இன்றைய தினம், வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சர் சாலை விபத்து நிவாரணத் தொகை 2 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில், சிறுகுறு விவசாய சான்று 9 பயனாளிகளுக்கும், விதவை சான்று மற்றும் வாரிசு சான்று உள்ளிட்ட சான்றுகள் 9 பயனாளிகளுக்கும், சிப்பம் கட்டும் அறை அமைத்தல் 2 பயனாளிகளுக்கும், விவசாய பந்தல் அமைத்தல் 1 பயனாளிகளுக்கும் மற்றும் வனத்துறையின் சார்பில் 2 வனக்குழுக்களுக்கு தலா 1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் உதவித்;தொகை, மற்றும் 19 நபர்களுக்கு பழங்குடியினர் சாதிசான்று, 1136 சத்துணவு பணியாளர்களுக்கு சுகாதார உபகரணங்கள் அடங்கிய பைகள் மற்றும் 4 பயனாளிகளுக்கு மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் பெருவதற்கான ஆணை என மொத்தம் 1182 பயனாளிகளுக்கு மாணபுமிபு அமைச்சர் பெருமக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.அ.வே.சுரேந்திரன், மாவட்ட வன அலுவலர் திரு.என்.எஸ்.தேஜஸ்வி.இ.வ.ப, முன்னாள் மேயர் திரு.வி.மருதராஜ், சுற்றுலா அலுவலர் திருமதி.உமாதேவி, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் தலைவர் திரு.ஏ.டி.செல்லச்சாமி அவர்கள், வட்டாட்சியர் திரு.அ.வில்சன் தேவதாஸ்; மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.