Close

Kodai vizha

Publish Date : 27/05/2019

செ.வெ.எண்:- 192019 நாள்:- 26.05.2019
திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானலில் கோடைவிழா 2019 வருகின்ற 30.05.2019 அன்று தொடங்கி 08.06.2019 முடிய 10 நாட்கள் வரை நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இவ்வாண்டு கோடைவிழா 2019 மற்றும் 58வது மலர்கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலமாக 30.05.2019 முதல் 08.06.2019 முடிய 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் 30.05.2019 முதல் 01.06.2019 ஆகிய மூன்று நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்கண்காட்சியும் மற்றும் 30.05.2019 முதல் 08.06.2019 முடிய 10 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது.

இவ்விழாவினை 30.05.2019 அன்று மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள், மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் ஆகியோர் தலைமை தாங்கி துவக்கி வைக்கவுள்ளார்கள். மேலும் இவ்விழாவில் சம்பந்தப்பட்ட துறைகளின் அரசு செயலர்கள் மற்றும் துறை இயக்குநர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளர்கள்.

இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன்பிடித்தல் போட்டி, நாய்கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படும்.இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் மற்றும் உள்ளுர் பொதுமக்களையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அன்புடன் அழைக்கிறோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், கொடைக்கானல்-624101. தொலைபேசி எண்: 04542-241675 மற்றும் கைபேசி எண்: 9176995867 என்ற எண்களிலும் மற்றும் துணை இயக்குநர்(பொ), தோட்டக்கலைத்துறை, கொடைக்கானல். தொலைபேசி எண்: 9500493287 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.